பஞ்சு போன்ற சப்பாத்திக்கு... மாவு பிசைய ‘ஐஸ்’ யூஸ் பண்ணுங்க..!!

Kitchen Hacks: நம் வீட்டில் தயாரிக்கப்படும் சப்பாத்திகள் மென்மையாகவும், பஞ்சு போன்றதாகவும், நீண்ட நேரம் பிரெஷ்ஷாகவும்  இருக்க வேண்டும் என்பதற்காக நாம் பல விதங்களில் நாம் முயற்சி செய்திருப்போம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 22, 2024, 03:05 PM IST
  • மாவில் ஐஸ் சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் எப்படி இருக்கும்.
  • நீங்கள் தாயரித்த சப்பாத்தி நீண்ட நேரதிற்கு மென்மையாகவும், பிரெஷ்ஷாகவும் இருக்கும்.
  • மாவை பிசைந்து பிரிட்ஜில் வைத்தால், அது கெட்டியாக மாறும்.
பஞ்சு போன்ற சப்பாத்திக்கு... மாவு பிசைய ‘ஐஸ்’ யூஸ் பண்ணுங்க..!! title=

Kitchen Hacks in Tamil: சப்பாத்திக்கு மாவு பிசையும் போது நம்மில் பெருமபாலானோர் அறையின் தட்பநிலையில் உள்ள சாதாரண தண்ணீரைத் தான் பயன்படுத்துவோம். சிலர் வெதுவெதுப்பான நீர் கொண்டு பிசைவார்கள். ஆனால் மாவில் ஐஸ் சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் எப்படி இருக்கும்? இதனை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்த்தால், கிடைக்கும் பலன்கள் உங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக இருக்கும். ஐஸ் கொண்டு மாவை பிசைந்து சப்பாத்தி செய்வது உங்களுக்கு அற்புதமான பலன்களைத் தரும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

நம் வீட்டில் தயாரிக்கப்படும் சப்பாத்திகள் மென்மையாகவும், பஞ்சு போன்றதாகவும், நீண்ட நேரம் பிரெஷ்ஷாகவும்  இருக்க வேண்டும் என்பதற்காக நாம் பல விதங்களில் நாம் முயற்சி (Kitchen Hacks) செய்திருப்போம். சப்பாத்தி மாவை பிசையும் போது, சூடான தண்ணீர், பால் அல்லது நெய்யைப் பயன்படுத்தி மாவை பிசைவது என பல முயற்சிகள் செய்திருப்போம். ஆனால், மாவில் ஐஸ் கட்டிகளை சேர்த்து பிசைவதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால், அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன, இந்த மாவில் என்ன வகையான சப்பாத்திகள் தயாரிக்கப்படுகின்றன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மாவை பிசைந்து பிரிட்ஜில் வைத்தால், அது கெட்டியாக மாறுவதோடு, அதன் நிறமும் கருப்பாக மாறிவிடும். இதனால் சப்பாத்தி தயாரிப்பதில் சிரமம் ஏற்படுவது மட்டுமின்றி, நன்றாக உப்பி வராது. அத்தகைய சூழ்நிலையில், மாவை பிசையும் போது ஐஸ் பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் ஐஸ் கட்டிகளை போடவும். தண்ணீரில் ஐஸ் முற்றிலும் கரைந்தவுடன், இந்த தண்ணீரில் மாவை பிசையவும். இந்த மாவில் ரொட்டி செய்யும் போது, ​​ரொட்டி மென்மையாக வருவதோடு மட்டுமல்லாமல், நன்றாக உப்பி வரும். மாவு கருப்பு நிறமாகவும் மாறாது. நீங்கள் தாயரித்த சப்பாத்தி நீண்ட நேரதிற்கு மென்மையாகவும், பிரெஷ்ஷாகவும் இருக்கும்.

மேலும் படிக்க | உங்கள் குழந்தையுடன் நெருக்கத்தை அதிகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியவை..!!

பஞ்சுபோன்ற மற்றும் சுவையான சப்பாத்திகள் இன்னும் சில டிப்ஸ்களை முயற்சி செய்யலாம். மாவை பிசையும் போது வெதுவெதுப்பான எண்ணெய் அல்லது நெய்யையும் பயன்படுத்தலாம். இதன் காரணமாக மாவு மென்மையாக மாறும் மற்றும் பிசைந்த பிறகு உலராமல் இருக்கும். இதுவும் ரொட்டியை மென்மையாக்குகிறது.

பொதுவாக மாவை பிசைந்து சிறிது நேரம் கழித்து தான் சப்பாத்தி செய்ய வேண்டும். மேலும் மாவை பிசைந்து வைத்த பிறகு, ஒரு மஸ்லின் துணியை தண்ணீரில் நனைத்து, பிழிந்து, மாவின் மேல் போர்த்தி நிலையில் வைக்கவும். மாவை பிசைந்த பிறகு காற்று புகாத பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைத்தாலும் மாவு காய்ந்து போகும் பிரச்சனை இருக்காது.

மேலும் படிக்க | உங்க மொபைல் நம்பர் மாறிடுச்சா .. மறக்காம ‘இதை’ செய்திடுங்க.. இல்லாட்டி சிக்கல் தான்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News