பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 26, 2022, 06:33 PM IST
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு! title=

அரசாங்க வேலையை தேடிக்கொண்டிருப்பவர்கள், பாதுகாப்பான வேலையை தேடுபவர்கள் இப்போது பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் 2022ம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.  இந்தியாவின் முதன்மையான அணு ஆராய்ச்சி மையமாக விளங்கும் இந்த பாபா அணு ஆராய்ச்சி மையம் ஸ்டைபெண்டரி ட்ரெயினி, சைன்டிஃபிக் அசிஸ்டன்ட் மற்றும் பல காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை நிரப்பி வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | Bank Holidays: மே மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை

1) மொத்த காலி பணியிடங்கள் :

266 பணியிடங்கள் உள்ளது

2) பதவிகள் :

ஸ்டைபெண்டரி ட்ரெயினி - 71 பணியிடங்கள் 

ஸ்டைபெண்டரி ட்ரெயினி - 189 பணியிடங்கள் 

சைன்டிஃபிக் அசிஸ்டன்ட்/பி(செக்யூரிட்டி) - 1 பணியிடம் 

டெக்னீஷியன்/பி (லைப்ரரி சயின்ஸ்) - 1 பணியிடம் 

டெக்னீஷியன்/பி (ரிக்கர்) - 4 பணியிடங்கள் 

3) வயது வரம்பு :

ஸ்டைபெண்டரி ட்ரெயினிக்கான வயது வரம்பு 18 முதல் 24 வரை, மற்ற பதவிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 22 வயது ஆகும். 

4) உதவித்தொகை :

முதல் பிரிவு பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.16,000 வழங்கப்படும், ஒரு வருடத்திற்கு பின்னர் இது ரூ.18,000 ஆக உயர்த்தப்படும்.

இரண்டாம் பிரிவு பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ. 10,500  வழங்கப்படும், ஒரு வருடத்திற்கு பின்னர் இது ரூ.12,500 ஆக உயர்த்தப்படும்.

5) தேர்வு முறை :

எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

6) விண்ணப்ப கட்டணம் :

பயிற்சியாளர் பணிக்கு ரூ.150 விண்ணப்ப கட்டணமும், இதர பதவிகளுக்கு ரூ.100 கட்டணமும் செலுத்த வேண்டும்.  எஸ்சி/எஸ்டி, பிடபுள்யூடி, பெண்கள் மற்றும் முன்னர் ராணுவ வீரர்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி :

தகுதியான விண்ணப்பதாரர்கள் nrbapply.formflix.com என்கிற இணையதளத்தில் ஏப்ரல்-30ம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க | PM Kisan: இந்த விவசாயிகளுக்கு 11வது தவணையின் 2000 ரூபாய் கிடைக்காது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News