Jio Happy New Year Offer: மற்ற நெட்வொர்க்குகளுக்கும் இனி free, unlimited calls

இந்த புத்தாண்டில் IUC கட்டணத்தை அகற்றுவதோடு ஜியோ தனது நான்கு சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களையும் அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 31, 2020, 04:35 PM IST
  • ஜியோ தன் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசை வழங்கியுள்ளது.
  • இந்த புத்தாண்டில் IUC கட்டணத்தை ஜியோ அகற்றியுள்ளது.
  • இது தவிர நான்கு சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களையும் கொண்டு வந்துள்ளது.
Jio Happy New Year Offer: மற்ற நெட்வொர்க்குகளுக்கும் இனி free, unlimited calls title=

ஒவ்வொரு ஆண்டும் தனது வாடிக்கையாளர்கள் எந்த அறிவிபுக்காக காத்திருப்பார்களோ, அந்த ரிலையன்ஸ் ஜியோவின் சலுகைக்கான அறிவிப்பை 2020 கடைசி நாளில் ஜியோ இன்று செய்துள்ளது. ஜியோ, Jio Happy New Year Offer 2021-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய ஆண்டு முதல் அதாவது ஜனவரி 1, 2021 முதல், அதன் வாடிக்கையாளர்கள் முன்பு போலவே அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ள முடியும் என்று ஜியோ கூறியுள்ளது. தற்போதைக்கு, மற்ற நெட்வொர்க்குகளை அழைப்பதற்கான ஒவ்வொரு திட்டத்துடனும் சில IUC நிமிடங்களை Jio கொண்டுள்ளது.  

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) உத்தரவைத் தொடர்ந்து ஐ.யூ.சியை ரத்து செய்ய ஜியோ முடிவு செய்திருந்தாலும், வரம்பற்ற இலவச அழைப்புக்கான உறுதிமொழியில் உறுதியாக இருப்பதாக ஜியோ தனது புதிய சலுகையைப் பற்றி கூறிகையில் தெரிவித்தது.

ALSO READ: வெறும் ₹.199-க்கு தினசரி 3GB data வழங்கும் சூப்பர் திட்டத்தை வெளியிட்ட BSNL!

ஜியோவின் நான்கு சிறந்த திட்டங்கள்

இந்த புத்தாண்டில் IUC கட்டணத்தை அகற்றுவதோடு Jio தனது நான்கு சிறந்த ப்ரீபெய்ட் (Prepaid) திட்டங்களையும் அறிவித்துள்ளது. இதில் ரூ. 129, ரூ .149, ரூ 199 மற்றும் ரூ 555, ஆகிய தொகைக்கான திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களின் செல்லுபடியாகும் கால அவகாசம் முறையே 28 நாட்கள், 24 நாட்கள், 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் ஆகும். இந்த திட்டங்களின் நன்மைகள் பற்றி பேசும்போது, ​​ரூ .129 க்கான திட்டத்தில் வரம்பற்ற அழைப்போடு 2GB தரவு கிடைக்கும்.

ரூ .149 திட்டத்தில் ஒரு நாளைக்கு 1GB டேட்டாவுடன் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கும். ரூ 199 திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 1.5GB டேட்டா மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பை வசதி கிடைக்கிறது. ரூ .555 திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கிறது.

ஜியோவில் மட்டுமே ICU இருந்தது

கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, ரிலையன்ஸ் Jio (Reliance Jio) முதன்முறையாக இன்டர் கனெக்டட் சார்ஜை (IUC) நடைமுறைப்படுத்தியது. இதன் பிறகு ஜியோவின் அனைத்து பிளான்களிலும் ICU நிமிடங்கள் வழங்கப்பட்டன. ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குகளை அழைக்க நீங்கள் பெறும் நிமிடங்கள் ஆகும்.

உதாரணமாக, உங்கள் 10 ரூபாய் திட்டத்துடன் 5 IUC நிமிடங்கள் கிடைத்தால், இந்த நிமிடங்கள் முடிந்ததும், நீங்கள் பிற நெட்வொர்க்குகளில் கால் செய்ய முடியாது. பிற நெட்வொர்க்குகளை அழைப்பதற்கு நீங்கள் மீண்டும் ஒரு ICU திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றில் IUC இல்லை

பயனர்கள் வேறொரு நெட்வொர்க்கில் பேசினால், அதற்கு IUC கட்டணம் வசூலித்த நாட்டின் ஒரே தொலைத் தொடர்பு நிறுவனமாக Jio இருந்தது. இது கடந்த ஒரு வருடமாக நடந்து கொண்டிருந்தது. ஏர்டெல் (Airtel), வோடபோன், ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றின் அனைத்து திட்டங்களிலும் நீங்கள் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அழைக்க முடியும். ஆனால் ஜியோவில் அப்படி இல்லை. இப்போது ஒரு வருடம் கழித்து ஜியோ IUC-ஐ அகற்ற முடிவு செய்துள்ளது.

ALSO READ: Tech News: 2021-ல் வருகின்றன OnePlus-ன் இரண்டு புதிய ஃபோன்கள்: முழு விவரம் உள்ளே

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News