Indian Railways ஜாக்பாட் செய்தி: ரயிலில் பயணிகளுக்கு இலவச உணவு, மக்கள் ஹேப்பி

Indian Railways: இனி பயணிகளுக்கு ரயிலில் இலவச உணவு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 22, 2023, 06:12 AM IST
  • புதிய விதியின்படி, ரயிலில் பயணம் செய்யும் போது உணவுக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை.
  • பயணிகளுக்கு அனைத்து விதமான வசதிகளும் ரயில்வே மூலம் செய்யப்பட்டுள்ளன.
  • ஆனால் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத அத்தகைய வசதியைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ளலாம்.
Indian Railways ஜாக்பாட் செய்தி: ரயிலில் பயணிகளுக்கு இலவச உணவு, மக்கள் ஹேப்பி  title=

இந்திய ரயில்வே: ரயிலில் பயணம் செய்யும் கோடிக்கணக்கான பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் நபராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். இப்போது ரயில்வே ஒரு சிறப்பு வசதியை அளிக்கவுள்ளது. ரயில் பயணிகளுக்கு இந்திய ரயில்வே அவ்வப்போது பல இலவச வசதிகளை வழங்குகிறது. இது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சில தககல்களை அளித்துள்ளார். 

இனி பயணிகளுக்கு ரயிலில் இலவச உணவு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். நீங்களும் ரயிலில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், இப்போது உங்களுக்கும் இலவசமாக உணவு கிடைக்கும். ரயில்வே தரப்பில் எந்தப் பயணிகளுக்கு இந்த வசதி கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளாலாம். 

புதிய விதிகள் வெளியிடப்பட்டன

புதிய விதியின்படி, ரயிலில் பயணம் செய்யும் போது உணவுக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை. பயணிகளுக்கு அனைத்து விதமான வசதிகளும் ரயில்வே மூலம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத அத்தகைய வசதியைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ளலாம். 

ரயில் தாமதமானால் பலன் கிடைக்கும்

இந்திய ரயில்வேயில் பலமுறை பயணம் செய்பவர்கள் ரயிலுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. ரயில் பல முறை தாமதமாகிறது, ஆனால் இப்போது உங்கள் ரயில் தாமதமாக வந்தால், ரயில்வே தரப்பிலிருந்து இலவச உணவு வசதி கிடைக்கும். சில சிறப்பு பயணிகளுக்கு இலவச உணவு வசதியை ரயில்வே வழங்குகிறது.

மேலும் படிக்க | வந்தே பாரத் முதல் ராஜதானி வரை... இந்தியாவில் ஓடும் அதிவேக ரயில்கள் - முழு விவரம்!

ஐஆர்சிடிசி விதி என்ன தெரியுமா?

ஐஆர்சிடிசி விதிகளின்படி, பயணிகளுக்கு இலவச உணவு வசதி வழங்கப்படுகிறது. உங்கள் ரயில் 2 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வரும்போது இந்த வசதி உங்களுக்கு வழங்கப்படும். இந்த வசதியை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ போன்ற விரைவு ரயில்களில் பயணிப்பவர்களுக்கு இந்த செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் கிடைக்கும்

ஆன்லைன் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கும் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் இருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏதேனும் காரணத்தால் ரயிலை தவறவிட்டாலும், பணத்தைத் திரும்பப் பெறலாம். இதற்காக, ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட 1 மணி நேரத்திற்குள் TDR படிவத்தை பூர்த்தி செய்து டிக்கெட் கவுண்டரில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | IRCTC அளித்த முக்கிய அறிவிப்பு: இதை மட்டும் செஞ்சிடாதீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News