No Cost EMI-ல் பொருட்கள் வாங்க போறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க!

நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷனை நீங்கள் தேர்ந்தெடுக்கும்பொழுது உங்களுக்கான தவணை காலத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம், தவணை காலம் 3 முதல் 24 மாதங்கள் வரை இருக்கலாம்.  

Written by - RK Spark | Last Updated : Oct 12, 2022, 09:12 AM IST
  • பண்டிகை காலத்தில் ஒவ்வொரு நிறுவனங்களும் சலுகைகளை வழங்கும்.
  • வீட்டு உபகரணங்கள் மற்றும் கேட்ஜெட்டுகளை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டுவார்கள்.
  • பலரும் நோ காஸ்ட் இஎம்ஐ முறையை தேர்வு செய்கிறார்கள்.
No Cost EMI-ல் பொருட்கள் வாங்க போறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க! title=

பல நிறுவனங்களும் அடிக்கடி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு விதமான சலுகை கட்டணங்களை வழங்கி வருகிறது, அதிலும் குறிப்பாக பண்டிகை காலம் என்றால் சொல்லவே வேண்டாம்.  பண்டிகை காலத்தில் ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டிபோட்டுக்கொண்டு சலுகைகளை வழங்கும். 
அப்படி நிறுவனங்கள் வழங்கும் பிரபலமான சலுகைகளில் ஒன்று நோ காஸ்ட் இஎம்ஐ.  பண்டிகை காலங்களில் வாகனங்கள், வீட்டு உபகரணங்கள் மற்றும் கேட்ஜெட்டுகளை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டுவார்கள்.  அப்படி பொருட்களை தவணை முறையில் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த நோ காஸ்ட் இஎம்ஐ முறை சுலபமானதாக தெரியும், ஏனென்றால் இதில் கூடுதல் கட்டணங்கள் எதுவும் உங்களுக்கு விதிக்கப்பட்டது.  இந்த நோ காஸ்ட் இஎம்ஐ கட்டண முறையானது அதிகளவில் கேட்ஜெட்ஸ் மற்றும் வீட்டு உபகரண பொருட்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | UPI-ல் பணம் செலுத்த இனி கட்டணம்? முக்கிய அப்டேட்!

நோ காஸ்ட் இஎம்ஐ மூலம் பொருட்களை வாங்க விரும்புபவர்கள் முதலில் இந்த முறையை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.  நீங்கள் இப்போது நோ காஸ்ட் இஎம்ஐ அல்லது ஜீரோ காஸ்ட் இஎம்ஐ முறையை தேர்வு செய்கிறீர்கள் என்றால் மாதம் தோறும் நீங்கள் கட்டவேண்டிய தவணை தொகையில் கூடுதல் கட்டணம் எதுவும் கட்டவேண்டிய தேவையில்லை, அந்த பொருளின் உண்மை விலை என்னவோ அதைதான் மாதந்தோறும் தவணை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக கட்ட போகிறீர்கள் என்று அர்த்தம்.  வங்கிகளும் இதுபோன்ற நோ காஸ்ட் இஎம்ஐ திட்டங்களை வழங்குகிறது, சில வங்கிகள் ஜீரோ டவுன் பேமெண்ட் திட்டங்களையும் வழங்குகிறது, இதற்கு நீங்கள் முன்கூட்டியே எவ்வித கட்டணங்களையும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் சில வங்கிகளில் முன்கூட்டியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷனை நீங்கள் தேர்ந்தெடுக்கும்பொழுது உங்களுக்கான தவணை காலத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம், தவணை காலம் 3 முதல் 24 மாதங்கள் வரை இருக்கலாம்.  நோ காஸ்ட் இஎம்ஐ திட்டத்தில் உங்களுக்கு வட்டி போன்ற கூடுதல் கட்டணங்கள் எதுவும் இல்லையென்றாலும், அந்த பொருளின் உண்மையான தொகையை மட்டும் தான் தவணை முறையில் செலுத்துவீர்கள் என்பது கிடையாது.  சில நிறுவனங்கள் நோ காஸ்ட் இஎம்ஐ திட்டத்திற்கு ப்ராசஸிங் கட்டணத்தை வசூலிக்கின்றனர், அதுமட்டுமல்லாது இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் வாங்கும் பொருளின் தள்ளுபடி உங்களுக்கு கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | ஊழியர்களின் PF மீதான வட்டி அதிகரிப்பு பற்றிய முக்கிய அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News