புதுடெல்லி: 5G அலைக்கற்றை ஏலத்தில் ஜியோ அதிக விலைக்கு ஏலம் எடுத்தது, அதன் மொத்த செலவு 88,078 கோடி ரூபாய் ஆகும். இந்த ஏலத்தில் பார்தி ஏர்டெல் 19,867 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை வெவ்வேறு பேண்டுகளில் 43,084 கோடி ரூபாய்க்கு வாங்கியது என்றால், வோடபோன் ஐடியா நிறுவனம் 18,784 கோடி ரூபாய்க்கு ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றையை வாங்கியது. மொத்தத்தில், 150,173 கோடி ரூபாய் அளவில் ஏலம் பெறப்பட்டது. ஒட்டுமொத்தமாக 71 சதவீத அலைக்கற்றைகள் 1.5 டிரில்லியன் ரூபாய் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த தொகையை செலுத்த அனைத்து டெலிகாம் ஆபரேட்டர்களும் தங்களது கட்டணத்தை 4 சதவீதம் உயர்த்த வேண்டும் என்பதால், 5ஜி அலைக்கற்றை ஏலத்தின் தொகைக்கான சுமை இண்டர்நெட் பயன்படுத்துபவர்கள் ஏற்க வேண்டியிருக்கும்.
5G-4G-பேக்-விகித உயர்வு
இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ அதிக அளவில்னா ஏலத்த்தை எடுத்துள்ளதால், பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவை விட, தங்கள் தயாரிப்புகளின் விலையை அதிகமாக உயர்த்த வேண்டியிருக்கும். ஒட்டுமொத்தமாக பார்த்தால், நாட்டில் 5G திட்டங்கள் விலை அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளது.
மேலும் படிக்க | EPFO Pension: ஓய்வூதிய கொள்கையில் மாற்றம்! புதிய விதிகளை தெரிந்துகொள்ளுங்கள்!
ஜியோ, ஏர்டெல், விஐ ஆகிய நிறுவனங்கள் 4ஜி திட்டங்களின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்
பெரிய SUC சேமிப்புடன், தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் வருடாந்திர ஸ்பெக்ட்ரம் செலவை இரு வழிகளில் எதிர்கொள்ளலாம். அதில் முதலாவது வழி, டெலிகாம் ஆபரேட்டர்கள் மொத்த வாடிக்கையாளர்களின் கட்டணத்தை 4 சதவீதம் அதிகரிப்பது என்பதாக இருக்கும்.
இரண்டாவது வழியில், 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 1.5 ஜிபி தினசரி டேட்டா வழங்கும் பிரபலமான 4ஜி திட்டத்தை விட, நிறுவனங்கள் 5ஜி திட்டங்களில் 30 சதவீதம் கூடுதல் பிரீமியம் வசூலிக்க வேண்டும்.
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுத்திருக்கும் ஜியோ, கட்டணத்தை பிற நிறுவனங்களைவிட அதிகம் உயர்த்த வேண்டும். SUC சேமிப்பிற்குப் பிறகு, ஜியோவின் ஸ்பெக்ட்ரம் செலவினம் ரூ. 5,290 கோடியாக இருக்கும், இது பார்தி ஏர்டெல் செலவழித்த ரூ.1,430 கோடி மற்றும் Vi செலவழித்த ரூ.720 கோடியை விட அதிகமாகும்.
பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை 2 சதவீதம் அதிகரிக்க வேண்டும், அதே நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ செலவை ஏற்க திட்டத்தை 7 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
10 அலைவரிசைகளில் வழங்கப்பட்ட 72,098 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளில், 51,236 மெகா ஹெர்ட்ஸ் அல்லது 71 சதவீதம் விற்கப்பட்டது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை பயன்படுத்துவதற்கு, முதல் ஆண்டில் 13,365 கோடி ரூபாய் அரசுக்கு கிடைக்கும். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவை தொடங்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க | EPS அப்டேட்: இரட்டிப்பாகும் ஓய்வூதியம், ரூ. 15,000 வரம்பு அகற்றப்படும், விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ