IRCTC வழங்கும் புதிய சேவை! டிக்கெட்டை ரத்து செய்தால் உடனடியாக பணம் கிடைக்கும்!

ரயில் பயணத்திற்காக முன்பதிவு செய்துவிட்டு, டிக்கெட்டுகளை ரத்து செய்தால், இனிமேல் பணம் உடனடியாக திரும்பக் கிடைக்கும். இதற்காக IRCTC புதிய சேவை ஒன்றை தொடங்கியிருக்கிறது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 17, 2021, 07:48 AM IST
  • IRCTC வழங்கும் புதிய சேவை!
  • ரயில் பயணச்சீட்டை ரத்து செய்தால் உடனடியாக பணம்
  • IRCTCயின் புதிய செயலி iPay
IRCTC வழங்கும் புதிய சேவை! டிக்கெட்டை ரத்து செய்தால் உடனடியாக பணம் கிடைக்கும்!  title=

புதுடெல்லி: ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இப்போது வரை, ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ஏதேனும் காரணத்தால் ரத்து செய்யப்பட்டாலோ, பணத்தைத் திரும்பப் பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது (IRCTC iPay Refund). 

ஆனால் இப்போது அப்படி நடக்காது. இப்போது ரயில்வே உடனடியாக டிக்கெட்டுக்கான தொகையை திரும்பக் கொடுக்கும் வகையில் புதிய சேவையை வழங்குகிறது. அதற்காக, IRCTC (Indian Railway Catering and Tourism Corporation) IRCTC-iPay என்ற பெயரில் அதன் சொந்த கட்டண நுழைவாயிலை அறிமுகப்படுத்தியது.

இந்த சேவை (IRCTC iPay app) ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. இந்த செயலியின் கீழ், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான கட்டணம் எந்த வங்கியின் பேமெண்ட் கேட்வே மூலமாகவும் செய்யலாம். நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த அம்சமானது,  டிக்கெட் ரத்து செய்யப்பட்டவுடன், அதன் ரீஃபண்ட் (IRCTC iPay Refund Status) உடனடியாக உங்கள் கணக்கிற்கு திருப்பி அனுப்பவும் உதவியாக இருக்கிறது. 

IRCTC iPay (IRCTC iPay டிக்கெட் புக்கிங் செயல்முறை) இலிருந்து ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான முழுமையான செயல்முறையை அறிந்து கொள்ளுங்கள்.

ALSO READ | IRCTC உடன் இணைந்து மாதம் ₹80,000 சம்பாதிக்கும் சிறந்த வழி

IRCTC iPay ரயில் டிக்கெட் முன்பதிவு செயல்முறை
1. iPay மூலம் முன்பதிவு செய்ய, முதலில் www.irctc.co.in இல் உள்நுழையவும்.
2. இப்போது பயணம் தொடர்பான இடம் மற்றும் தேதி போன்ற விவரங்களை நிரப்பவும்.
3. இதற்குப் பிறகு, எந்த ரயிலில் பயணம் செய்வது என்பதை முடிவு செய்து,  ரயிலைத் தேர்ந்தெடுக்கவும்.
4. டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, ​​கட்டண முறையில் 'IRCTC iPay' என்ற முதல் தெரிவு வரும். 
5. இந்த விருப்பத் தெரிவைத் தேர்ந்தெடுத்து, 'pay and book' என்பதைக் கிளிக் செய்யவும்.
6. இப்போது பணம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது UPI விவரங்களை நிரப்பவும்.
7. இதற்குப் பிறகு, உங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும், அதன் உறுதிப்படுத்தும் SMS மற்றும் மின்னஞ்சல் உங்களுக்கு வந்துவிடும். 
8. முதல்முறையாக நீங்கள் பூர்த்தி செய்யும் விவரங்கள் மீண்டும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது வந்துவிடும். எனவே, பயணச்சீட்டு முன்பதிவு என்பதும் மிகவும் சுலபமானதாகிவிடும் என்பது கூடுதல் நன்மை ஆகும்.  

ALSO READ | 50% சேவை கட்டண பகிர்வு உத்தரவை வாபஸ் பெற்றது ரயில்வே

உடனடியாக பணத்தைத் திரும்பப் பெறுங்கள்
இந்த சேவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் பணத்தைத் திரும்பப் பெற அதிக நேரம் எடுக்கும். ஆனால் இப்போது இந்தப் பணம் உடனடியாகக் கணக்கில் வந்துவிடும். 

IRCTC இன் கீழ், பயனர் தனது UPI பேங்க் அக்கவுண்ட் அல்லது டெபிட்டிற்கு ஒரே ஒரு ஆணையை மட்டுமே வழங்க வேண்டும். அதேபோல, டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான நேரமும் குறைவாக இருக்கும்.

காத்திருப்பு டிக்கெட்டுகளிலும் (waiting tickets) உடனடியாக பணம் கிடைக்கும்
பல முறை நீங்கள் பயணச்சீட்டு வாங்க்கும்போது உங்கள் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் (waiting tickets) இருக்கும். இறுதி  பயண அட்டவணை தயாரிக்கப்பட்ட பிறகு, உங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்றால், காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட் தானாகவே ரத்தாகிவிடும். அப்போதும், டிக்கெட்டுக்காண பணம் உடனடியாக உங்கள் கணக்கிற்கு திரும்பிவிடும்.  

ALSO READ | மும்பையில் IRCTCயின் முதல் Pod ஹோட்டல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News