இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு: ரயிலில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் தற்போது ஐஆர்சிடிசியின் இணையதளம் அல்லது ஆப் மூலம் தங்களின் டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்கிறார்கள். ஆனால் நீங்கள் கடைசியாக ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை எப்போது பதிவு செய்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்களுக்கு நினைவில் இல்லை என்றால் இந்த செய்தியை கவனமாக படிக்கவும். இந்த ஆண்டு 2022 இல் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, IRCTC 30 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், IRCTC தற்போது செய்துள்ள மாற்றங்களைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்.
40 லட்சம் பயனர்கள் தங்கள் கணக்கை வெரிஃபை செய்யவில்லை
கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு ரயில்கள் இயக்கப்பட்ட பிறகு, ஐஆர்சிடிசி பயன்பாடு மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகளை மாற்றியது. புதிய விதியின்படி, டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன், பயனர்கள் தங்கள் வெரிஃபை செய்ய வேண்டும். ஆனால் சுமார் 40 லட்சம் பயனர்கள் தங்கள் கணக்கை இன்னும் வெரிஃபை செய்யவில்லை. கணக்கைச் வெரிஃபை செய்யாத பயனர்கள் எதிர்காலத்தில் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது என்று ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கார் கடன் வாங்க வேண்டுமா? இந்த ‘4’ விஷயத்தை மறக்காம ஃபாலோ பண்ணுங்க!
வெர்ஃபிகேஷன் செயல்முறையை விரைவில் முடிக்கவும்:
IRCTC வழங்கிய விதியின் கீழ், ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன், பயனர்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை வெர்ஃபை செய்ய வேண்டியது அவசியமாகும். எனவே உங்கள் IRCTC கணக்கை நீங்கள் இன்னும் வெர்ஃபை செய்யவில்லை என்றால், வெர்ஃபிகேஷன் செயல்முறையை விரைவில் நிறை செய்யவும். இதைச் செய்து முடித்த பிறகு, டிக்கெட் முன்பதிவு செய்வதில் எந்த வித சிக்கலையும் நீங்கள் சந்திக்க நேரிடாது.
இப்போது நாம் மொபைல் மற்றும் மின்னஞ்சல் வெர்ஃபிகேஷன் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்
- IRCTC பயன்பாடு அல்லது இணையதளத்திற்குச் சென்று வெர்ஃபிகேஷன் சாளரத்தில் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.
- இரண்டு தகவல்களையும் உள்ளிட்ட பிறகு, வெர்ஃபை பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- இங்கே கிளிக் செய்தால் உங்கள் மொபைலில் OTP வரும், அதை உள்ளிட்டு மொபைல் எண்ணைச் வெர்ஃபை செய்யவும்.
- மின்னஞ்சல் ஐடியில் பெறப்பட்ட குறியீட்டை உள்ளிட்ட பிறகு, உங்கள் ஈமெயில் ஐடியும் வெர்ஃபை செய்யப்படும்.
- இந்த செயல்முறையை முடித்த பிறகு, ரயிலுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நீங்கள் சுலபமாக செய்யலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ