குறைந்த செலவில் அந்தமான் டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!

IRCTC ANDAMAN Tour Package: IRCTC அந்தமான் டூர் பேக்கேஜில், பர்தாங், ஹேவ்லாக், நீல் தீவு மற்றும் போர்ட் பிளேயரின் யாரும் அறியாத ஜெம்ஸ் போன்ற மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களை நீங்கள் கண்டு களிக்கலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 21, 2024, 02:12 PM IST
  • IRCTC அந்தமான் டூர் பேக்கேஜ் கட்டண விபரம்.
  • இந்திய ரயில்வே வழங்கும் சுற்றுலா பேக்கேஜ் குறித்த செய்தி உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
  • IRCTC அந்தமான் டூர் பேக்கேஜ் மூலம் கிடைக்கும் வசதிகள்.
குறைந்த செலவில்  அந்தமான் டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்! title=

IRCTC Andaman Tour Package:  கோடையில் கொளுத்தும் வெயில், வெயில், தூசி மற்றும் வியர்வை ஆகியவற்றில் இருந்து தப்பித்து, குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடும் காலம் இது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அந்தமான விரும்பினால், இந்திய ரயில்வே வழங்கும் சுற்றுலா பேக்கேஜ் குறித்த செய்தி உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். கோடையில் ஒரு சுற்றுலா செல்லுவதற்கு அந்தமானை விட சிறந்த இடம் இருக்க முடியாது எனலாம். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மிக அதிக அளவிலான மக்கள் சுற்றுலா செல்லும் இந்தியாவின் ஒரு சில இடங்களில் அந்தமான் முக்கியமான இடமாக உள்ளது. 

இன்றைய காலகட்டத்தில், கோவா, மாலத்தீவுகளை விட, தேனிலவுக்குக் கூட அந்தமான் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களுக்குச் செல்ல விரும்புகிறார்கள். அந்தமானில், நீங்கள் பல அழகான இடங்களைப் பார்க்க முடியும் . நீங்கள் இந்த மாதம் அந்தமான் செல்ல திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், IRCTC அந்தமான் தொடர்பாக ஒரு சிறப்பு டூர் பேக்கேஜை (IRCTC ANDAMAN Tour Package) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சுற்றுலா பேக்கேஜில், 6 நாட்கள் மற்றும் 5 இரவுகள் அந்தமானின் பல அழகான இடங்களை நீங்கள் கண்டு களிக்க முடியும். சுற்றுலா பேக்கேஜ் மற்றும் முன்பதிவு விவரங்கள் தொடர்பான அனைத்து முக்கிய தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.

IRCTC வழங்கும் குடும்பத்தினருக்கான அந்தமான் ஹாலிடேஸ்-கோல்ட் (FAMILY ANDAMAN HOLIDAYS-GOLD) டூர் பேக்கேஜின் கீழ் (EHH96), 5 இரவுகள் மற்றும் 6 நாட்களில் சிறந்த பயணத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். போர்ட் பிளேயரில் இருந்து பயணம் தொடங்கும், அங்கிருந்து அந்தமானின் அழகிய பள்ளத்தாக்குகளில் காரில் உங்கள் துணையுடன் அழகான பயணத்தை அனுபவிக்க முடியும். இந்த பயணம் மே 25 முதல் தொடங்கும். இந்த பயணத்தை சாலை வழியில் மேற்கொள்ள ரயில்வே வழங்குகிறது.  இதில், நீங்கள் உங்கள் சொந்த செலவில் போர்ட் பிளேருக்கு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | நெல்லை டூ காசி - கயா - அயோத்தி ... IRCTC வழங்கும் சிறப்பு ரயில் சேவை... மிஸ் பண்ணாதீங்க!!

IRCTC அந்தமான் டூர் பேக்கேஜ் கட்டணம்

IRCTC அந்தமான் டூர் பேக்கேஜில், பர்தாங், ஹேவ்லாக், நீல் தீவு மற்றும் போர்ட் பிளேயரின் யாரும் அறியாத ஜெம்ஸ் போன்ற மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களை நீங்கள் கண்டு களிக்கலாம். 5 இரவுகள் மற்றும் 6 பகல்களைக் கொண்ட இந்த பயணத்திற்கு நீங்கள் சுமார் 27,500 ரூபாய் செலவழிக்க வேண்டும். இந்த பேகேஜ்ஜில், நீங்கள் கார் மூலம் முழு நகரத்தையும் சுற்றி அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

டூர் பேக்கேஜ் கட்டண விபரம்

அந்தமான் டூர் பேக்கேஜின் கட்டண விபரத்தை பொறுத்தவரையில், ஒரு நபருக்கான முன்பதிவுக்கு நீங்கள் ரூ 46,080 செலவழிக்க வேண்டும். அதேசமயம் ஒரு நபர்களுக்கு ரூ. 27,500 மற்றும் முன்று நபர்களுக்கு சேர்த்து பதிவு செய்ய ரூ.25,300 செலவாகும். 5 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு படுக்கை வசதி பெற 17,100 ரூபாயும், 2 வயது முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு படுக்கை வசதி பெற 13,650 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த தொகுப்பை நீங்கள் குழுவாகவும் பதிவு செய்யலாம். இதற்கு 4 பேர் கொண்ட குழுவிற்கு மொத்தம் ரூ.25,450 ஆகவும், 6 பேர் கொண்ட குழுவிற்கு ரூ.24,400 ஆகவும் இருக்கும்.

IRCTC அந்தமான் டூர் பேக்கேஜ் மூலம் கிடைக்கும் வசதிகள்

 

டூர் பேக்கேஜில் கீழ், நீங்கள் காரில் எல்லா இடங்களிலும் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், போர்ட் பிளேயர் அல்லது திரும்பிச் செல்வதற்கான பயணச் செலவு பேக்கேஜில் சேர்க்கப்படாது. இந்த டிக்கெட்டுகள் தவிர, சுற்றுலா தலத்தில் உள்ள சில இடங்களுக்கான நுழைவு கட்டணம், வனப்பகுதியின் அனுமதி ஆகியவை பேக்கேஜ் கட்டணத்தில் அடங்கும். 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கான காலை உணவு, இரவு உணவு மற்றும் மதிய உணவு போன்ற அனைத்து உணவுகளும் பேக்கேஜ் உடன் கிடைக்கும். எனவே நீங்கள் இந்த கார் டூர் பேக்கேஜை முன்பதிவு செய்ய நினைத்தால், ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று நீங்களே முன்பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க | குறைந்த செலவில் சிங்கப்பூர் - மலேஷியா டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News