புதுடெல்லி: டெல்லி-என்சிஆர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி. நாட்டின் முதல் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (Regional Rapid Transit System - RRTS) நடைபாதை டெல்லி மற்றும் மீரட் இடையே கட்டப்பட்டு வருகிறது. சாஹிபாபாத் முதல் துஹாய் வரையிலான அதன் முன்னுரிமைப் பிரிவு தயாராக உள்ளது மற்றும் RapidX ரயிலின் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. ராபிட்எக்ஸ் ரயில் சாஹிபாபாத்தில் இருந்து துஹாய் டிப்போ வரையிலான 17 கிமீ தூரத்தை வெறும் 12 நிமிடங்களில் கடந்துள்ளது. இந்தப் பாதையில் ரேபிட்எக்ஸ் ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இந்த ரயிலை மணிக்கு 180 கிமீ வேகத்தில் இயக்க முடியும். இந்த வழியில் இது நாட்டின் அதி வேக ரயில் ஆகும். விரைவில் RRTS இன் சாஹிபாபாத்-துஹாய் பகுதி பொதுமக்களுக்காக திறக்கப்படும்.
தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தின் (NCRTC) அதிகாரிகல் இது குறித்து கூறுகையில், RapidX சோதனைக்காக பாதையில் இயக்கப்படுகிறது என்றும், காலி ரயிலின் சோதனை ஓட்டம் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை நடக்கிறது என்றும், இந்த ரயில் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படுவதால், அதன் தொழில்நுட்ப கோளாறுகளை சரி பார்க்க முடியும் என்றும், தெரிவித்தனர். ராபிடெக்ஸ் அதிக்வேக ரயில் திட்டம் 2025ம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி - காசியாபாத் - மீரட் வழித்தடம் 82 கிலோமீட்டர் நீளம் கொண்டது. அதி வேகத்துடன், ரேபிட்எக்ஸ் டெல்லியிலிருந்து மீரட் வரையிலான தூரத்தை சுமார் 60 நிமிடங்களில் கடக்கும். ஆனால் விரைவில் சாஹிபாபாத் முதல் துஹாய் டிப்போ வரையிலான முன்னுரிமைப் பிரிவில் சாதாரண மக்கள் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும். 17 கிமீ நீளமுள்ள பிரிவில் சாஹிபாபாத், காசியாபாத், குல்தார், துஹாய் மற்றும் துஹாய் டிப்போ ஆகிய ஐந்து நிலையங்கள் உள்ளன.
மேலும் படிக்க | இந்திய ரயில்வேக்கு வருமானத்தை அள்ளி தரும் ‘5’ ரயில்கள் இவை தான்..!!
RRTS வழித்தடங்கள் அமைக்கப்படும் இடங்கள்
மத்திய அரசின் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் சாஹிபாபாத்-துஹாய் டெப்போ பிரிவில் ரேபிட்எக்ஸ் ரயில்களை இயக்க ஒப்புதல் அளித்துள்ளார். டெல்லி - மீரட் தவிர, டெல்லி - குருகிராம் - எஸ்என்பி- அல்வர் மற்றும் டெல்லி-பானிபட் ஆகிய இடங்களில் RRTS வழித்தடங்கள் உருவாக்கும் திட்டம் உள்ளது. டெல்லி - குருகிராம்- எஸ்என்பி- அல்வர் மூன்று கட்டங்களாக உருவாக்கப்படும். இதன் முதல் பகுதி 107 கி.மீ. இது டெல்லியில் உள்ள சராய் காலே கானில் தொடங்கி SNB நகர்ப்புற வளாகம் (ஷாஜஹான்பூர்-நீம்ரானா-பெஹ்ரோர்) வரை செல்லும். டெல்லி-பானிபட் வழித்தடமானது முர்தல், கன்னூர், சமல்கா மற்றும் பானிபட் போன்ற நகரங்களை இணைக்கும்.
முன்னதாக ஜூலை மாதம், டெல்லி-காசியாபாத்-மீரட் ஆர்ஆர்டிஎஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் துவக்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC) மூலம் நாட்டிலேயே முதன்முறையாக இது போன்ற அதிவேக ரயில் நெட்வொர்க்கை உருவாக்குகிறது. இது டெல்லி, உத்திர பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் அரசாங்கங்களின் கூட்டு முயற்சியாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ