New Guinness Record: இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

வனவிலங்கு கணக்கெடுப்பில் முக்கியமான camera-trap wildlife survey என்ற ஆய்வின்படி 2018 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் புலிகளின் மதிப்பீடு கின்னஸ் சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 11, 2020, 01:17 PM IST
  • இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து கின்னஸ் சாதனை
  • இலக்குகள் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே எட்டப்பட்டன
New Guinness Record: இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு  title=

புதுடெல்லி: மிகப்பெரிய camera-trap wildlife survey  என்ற கணக்கெடுப்பின்படி, 2018 ஆம் ஆண்டிற்கான இந்தியாவி புலி எண்ணிக்கை தொடர்பான ஆய்வுகள் புதிய Guinness Record ஏற்படுத்தியிருக்கிரது..

ட்விட்டரின் மைக்ரோ-பிளாக்கிங் (micro blogging) தளத்தில் இந்த செய்திகளைப் பகிர்ந்த சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "இந்தியா தனது இலக்கை எட்டுவதற்கான சாதனையை நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஏற்படுத்தி, நாட்டில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி இருக்கிறது" என்று கூறினார்.

"பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், #SankalpSeSiddhi மூலம் இலக்குக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான தனது குறிக்கோளை இந்தியா நிறைவேற்றியது. அகில இந்திய அளவில் #GuinnessWorldRecordஇல் புலிகளின் எண்ணிக்கையானது camera-trap #wildlife survey என்ற வனவிலங்கு கணக்கெடுப்பில் சாதனை புரிந்துள்ளது.  இது, உண்மையில் சுயசார்பு இந்தியாவின் (#AatmanirbharBharat!) ஒளி பொருந்திய சிறந்த உதாரணம்! " என்று ஜாவ்டேகர் தனது சமூக ஊடக கணக்கில் பதிவிட்டிருக்கிறார்.

2018 ஆம் ஆண்டில், இந்தியாவில் 2,967 புலிகள் வனப்பகுதிகளில் இருந்தன, அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் உள்ளன என்று அந்த ஆண்டின் புலி மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rea Also | கூகுள் 3D விலங்குகள்: புலி, கரடி, சிங்கம் என விலங்குகளை வீட்டுக்கு அழைத்து வரலாம்!!

139 ஆய்வு தளங்களில் 26,760 வெவ்வேறு இடங்களில் கேமரா பொறிகள் வைக்கப்பட்டன, இதில் 76,523 புலி மற்றும் 51,337 சிறுத்தை புகைப்படங்கள் உட்பட சுமார் 35 மில்லியன் புகைப்படங்கள் பதிவாகியுள்ளது.

புலிகளின் எண்ணிக்கை 2014 ல் 2226 ல் இருந்து 2967 ஆக உயர்ந்தது என்று கூறி பிரதமர் மோடி இந்த தரவை வெளியிட்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். 

2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புலிகளின் கணக்கெடுப்பில் காணப்பட்டதை விட கிட்டத்தட்ட 33% அதிகரிப்பு என்பது கவனிக்கத்தக்கது.

Trending News