மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. ரயில்வே புதிய டூர் பேக்கேஜ் அறிமுகம்

IRCTC Holiday Package: இந்த டூர் பேக்கேஜில் நீங்கள் கன்னியாகுமரியுடன் ராமேஸ்வரம் மற்றும் மதுரைக்கு செல்லலாம். இந்த டூர் பேக்கேஜின் பயண முறை சாலை வழியாக இருக்கும். இந்த டூர் பேக்கேஜ் இம்மாதம் 9ஆம் தேதி அதாவது அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 7, 2023, 04:40 PM IST
  • டூர் பேக்கேஜ் இரண்டு இரவுகள் மற்றும் மூன்று பகல்களுக்கானது.
  • டூர் பேக்கேஜின் பயண முறை சாலை வழியாக இருக்கும்.
  • ஒற்றை முன்பதிவுக்கு நீங்கள் 22,850 ரூபாய் செலவழிக்க வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. ரயில்வே புதிய டூர் பேக்கேஜ் அறிமுகம் title=

ஐஆர்சிடிசி கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை டூர் பேக்கேஜின் முழு விவரம்: சுற்றுலா பிரியர்களுக்கு தென்னிந்தியா மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்று. இங்கே நீங்கள் சுற்றிப் பார்ப்பதற்கு பல விருப்பங்களைப் பெறுவீர்கள். இங்கு நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். அதன்படி நீங்களும் அல்லது வீட்டில் இருக்கும் மூத்த குடிமக்கள் எவரேனும் தென்னிந்தியாவிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், இந்தச் செய்தி பெரிதும் பயன்படும். உண்மையில், IRCTC ஒரு மலிவான டூர் பேக்கேஜுடன் (IRCTC டூர் பேக்கேஜ்) களத்தில் இறங்கியுள்ளது, இதில் நீங்கள் தென்னிந்தியாவில் உள்ள மூன்று அழகான மற்றும் பிரபல்லமான இடங்களைப் பார்வையிடலாம்.

IRCTC இன் இந்த டூர் பேக்கேஜின் பெயர் கன்னியாகுமரி - ராமேஸ்வரம் - மதுரை ஹாலிடே பேக்கேஜ் (SMH54) {KANYAKUMARI - RAMESWARAM - MADURAI HOLIDAY PACKAGE (SMH54)} ஆகும். இந்த டூர் பேக்கேஜ் இரண்டு இரவுகள் மற்றும் மூன்று பகல்களுக்கானது. இந்த டூர் பேக்கேஜில் நீங்கள் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் மற்றும் மதுரைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இந்த டூர் பேக்கேஜின் பயண முறை சாலை வழியாக இருக்கும். இந்த டூர் பேக்கேஜ் இம்மாதம் அக்டோபர் 9ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் தொடங்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commisison: மத்திய ஊழியர்களுக்கு ஜாக்பாட், இந்த தேதியில் DA ஹைக் பரிசு

டூர் பேக்கேஜில் காலை உணவும் இரவு உணவும் வழங்கப்படும். டூர் பேக்கேஜின் சாப்பாட்டுத் திட்டத்தைப் பற்றி பேசுகையில், அதில் காலை மற்றும் இரவு உணவு தரப்படும். முழுமையான டூர் பேக்கேஜ் இண்டிகா/குவால்ஸ்/டவேரா ஏசியை உள்ளடக்கும். டூர் பேக்கேஜின் கீழ் கன்னியாகுமரியில் 1 இரவும், ராமேஸ்வரத்தில் 1 இரவும் தங்குவீர்கள். இந்த டூர் பேக்கேஜின் விலையில் பயணக் காப்பீடு, டோல், பார்க்கிங் மற்றும் அனைத்து வரிகளும் அடங்கும்.

இந்த டூர் பேக்கேஜின் கட்டனத்தைப் பற்றி நாம் பேசுகையில், ஒற்றை முன்பதிவுக்கு நீங்கள் 22,850 ரூபாய் செலவழிக்க வேண்டும். அதேசமயம் இரட்டைப் பகிர்வுக்கு ரூ.11,450 மற்றும் மூன்று பேர் பகிர்வுக்கு ரூ.8,360 செலவிட வேண்டும். இது தவிர, 5 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைக்கு, படுக்கைக்கு ரூ.6,200 மற்றும் படுக்கையில்லாத குழந்தைக்கு ரூ.4,150 செலவழிக்க வேண்டும். 

Package Tariff:  Per Person

Category

Single Occupancy

Double Occupancy

Triple Occupancy

Child With Bed

(5-11 years)

Child Without Bed

(5-11 years)

Comfort

22850

11450

8360 6200 4150
 

அதேசமயம், குரூப் புக்கிங்கில், இரட்டைப் பகிர்வுக்கு ரூ.8,850 மற்றும் டிரிபிள் ஷேரிங் செய்ய ரூ.8,260 செலவழிக்க வேண்டும். இது தவிர, 5 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைக்கு, படுக்கைக்கு, 7,310 ரூபாயும், கட்டில் இல்லாத குழந்தைக்கு, 5,450 ரூபாயும் செலவழிக்க வேண்டும். நீங்கள் இந்த டூர் பேக்கேஜை முன்பதிவு செய்ய நினைத்தால், ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச்  (இணையதளம்: www.irctctourism.com, மின்னஞ்சல்: tourismmas@irctc.com.) சென்று நீங்களே முன்பதிவு செய்யலாம்.

Costing for Group Booking

Category

 Double Occupancy

Triple Occupancy

Child With Bed

(5-11 years)

Child Without Bed

(5-11 years)

   Comfort

8850

8260 7310 5450

மேலும் படிக்க | RBI Repo Rate: ரெப்போ விகிதம் தொடர்பாக ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News