ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விவரம்: உங்கள் வீட்டில் இருக்கும் மூத்த குடிமக்களை சென்னையில் இருந்து ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமா? அப்போ உங்களுக்கு இந்த தகவல் கட்டாயம் பலன் தரும். மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஷீரடி சாய் பாபா கோயில் மிகவும் பிரபலாமான கோவில்களில் ஒன்றாகும். இந்த இடத்திற்கான அற்புதமான சுற்றுலா பேக்கேஜை IRCTC டூரிசம் அறிவித்துள்ளது. சென்னை ஷீரடி டூர் பெயரில் கொண்டு வரப்பட்ட இந்த பேக்கேஜ் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கப்படும். மொத்தம் மூன்று இரவும் நான்கு பகல்கள் கொண்ட இந்த பயணத்தில் நீங்கள் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இந்த பேக்கேஜின் விலை ரூ. 3400 முதல் தொடங்குகிறது. இப்போது ஐஆர்சிடிசியின் இந்த பேக்கேஜ் பற்றிய முழு விவரத்தை இங்கே விரிவாக பார்ப்போம்.
பேக்கேஜ் விவரங்கள் இவை..
டூர் பேக்கேஜ் பெயர்: சென்னை-ஷீரடி தொகுப்பு (Chennai-Shirdi Package)
சேருமிடம்: ஷீரடி
பயண முறை: TRAIN
நிலையம்/ புறப்படும் நேரம்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 10:10 மணிக்கு.
வகுப்பு: ஸ்லீப்பர் / தர்ட் ஏசி
உணவு திட்டம்: CPAI
ஹோட்டல் பெயர்: ஹோட்டல் சாய்ஸ்ரீ.
மேலும் படிக்க | பிக்சட் டெபாசிட் செய்பவர்களுக்கு குட் நியூஸ்! உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
பயணத்தின் முழு விவரம்:
நாள் 01:- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஷீரடி எக்ஸ்பிரஸ் (ரயில் எண். 22601) 10:10 மணிக்கு புறப்படும்.
நாள் 02:- 11:30 மணிக்கு சாய்நகர் ஷீரடி நிலையத்தை வந்தடையும், ஏசி அல்லாத வாகனம் மூலம் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். செக்-இன் செய்த பிறகு அவரவர் வசதிக்கேற்ப கோயிலுக்கு செல்லலாம். (சிறப்பு அல்லது கட்டண தரிசனம் எதுவும் வழங்கப்படாது). ஹோட்டலில் இரவு தங்குதல்..
நாள் 03:- 07:00 மணிக்கு ஹோட்டலில் இருந்து செக்-அவுட் செய்து, சாய்நகர் ரயில் நிலையத்திற்கு செல்வீர்கள், அங்கு சாய்நகர் சென்னை எக்ஸ்பிரஸில் (ரயில் எண். 22602) 08:25 மணிக்கு ஏறுவீர்கள்.
நாள் 04:- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 09:40 மணிக்கு வந்தடையும்.
பேக்கேஜ் கட்டணம் பின்வருமாறு..
ஸ்டாண்டர்ட்
சிங்கிள் ஆக்கிரமிப்பு - ரூ.5100/-
டபுள் ஆக்கிரமிப்பு - ரூ. 3550/-
டிரிபிள் ஆக்கிரமிப்பு - ரூ. 3400/-
குழந்தை (5-11 வயது) படுக்கையுடன் - ரூ. 3100/-
படுக்கை இல்லாத குழந்தை (5-11 வயது) - ரூ. 2360/-
கம்ஃபர்ட்
சிங்கிள் ஆக்கிரமிப்பு - ரூ. 7900/-
டபுள் ஆக்கிரமிப்பு - ரூ. 6350/-
டிரிபிள் ஆக்கிரமிப்பு - ரூ. 6210/-
குழந்தை (5-11 வயது) படுக்கையுடன் - ரூ. 5920/-
படுக்கை இல்லாத குழந்தை (5-11 வயது) - ரூ. 5175/-
பேக்கேஜ் விவரங்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு தொடர்பு கொள்ள:
ஐஆர்சிடிசி - சுற்றுலாத் தகவல் மற்றும் வசதி மையம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்: 044- 64594959, (0) 9003140681, 82 Fax No.: 044-25352978
பெங்களூர் - 080- 22370887, எர்ணாகுளம் - 0484-2382991
இணையதளம்: www.irctctourism.com
மின்னஞ்சல்: tourismmas@irctc.com.
மேலும் படிக்க | டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு அக்டோபர் 1 முதல் 2 புதிய விதிகள் அமல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ