Naukri தளத்தில் அதிக WFH வேலைகளை தேடிய இந்தியர்கள்!

கடந்த ஆண்டு ஜூலை நிலவரப்படி Naukri.com தளத்தில் 93,000 நிரந்தர(permanent) மற்றும் தற்காலிக (temporary) வேலைகளை பட்டியலிடப்பட்டு இருக்கிறது.    

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 16, 2022, 05:47 PM IST
  • கொரோனா காரணமாக பலரும் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகின்றனர்.
  • வேலை தேடுபவர்களுக்கென்று சில ஆன்லைன் செயலிகள் உள்ளது.
  • 57 சதவீத தேடல்கள் நிரந்தர வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை பற்றியே தேடப்பட்டுள்ளது
Naukri தளத்தில் அதிக WFH வேலைகளை தேடிய இந்தியர்கள்! title=

கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தால் மக்கள் பலரும் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  கொரோனா நோயினை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பல நிறுவனங்கள் அதன் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய கோரியுள்ளது.  இதன் காரணமாக பலரும் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகின்றனர், இந்த சூழலால் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வது ஆச்சர்யமான ஒன்றாகவும், வீட்டிலிருந்து கொண்டே பணிபுரிவது  இயல்பான ஒன்றாகவும் மாறிவிட்டது.  

wfh

மேலும் படிக்க | Home Loan; SBI விட குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கி!

இருப்பினும் இந்த தொற்று பரவல் காலகட்டத்தில் பலரும் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். வேலை தேடுபவர்களுக்கென்று சில ஆன்லைன் செயலிகள் உள்ளது.  அதில் கடந்த ஆண்டு ஜூலை நிலவரப்படி Naukri.com தளத்தில் 93,000 நிரந்தர மற்றும் தற்காலிக வேலைகளை பட்டியலிடப்பட்டு இருக்கிறது.  இவற்றில் 22 சதவீதம் மட்டுமே நிரந்தர வேலைவாய்ப்புகள் உள்ளது.

இந்தியர்கள் கடந்த ஆறு மாதங்களில், Naukri.com தளத்தில் கிட்டத்தட்ட 32 லட்ச நிரந்தர மற்றும் தற்காலிக  வேலைவாய்ப்புகளை தேடி இருப்பதாக அறிக்கை கூறுகிறது.  மேலும் இதில் ஒரே நேரத்தில் 57 சதவீத தேடல்கள் நிரந்தர வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை பற்றியே தேடப்பட்டுள்ளது.   அதிலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் அதிகபட்சமாக 3.5 லட்சத்திற்கும் அதிகமான தேடல்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

job

பொதுவாக பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் இரண்டும் வேலை தேடுபவர்களுக்கு மூன்று வகையான வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.  அதாவது வழக்கமான வேலைகள், வீட்டில் இருந்து பணிபுரியும் வகையில் தற்காலிகமான வேலை மற்றும் முற்றிலும் தொலைதூர வேலைகள் போன்றவை.  தகவலின் அடிப்படையில் ஐடி மென்பொருள், மென்பொருள் சேவைகள், ITeS மற்றும் ஆட்சேர்ப்பு/பணியாளர் துறைகள் அதிகளவில் நிரந்தரமான் தொலைதூர வேலை வாய்ய்ப்புகளை வழங்குகின்றன.  மேலும் அமேசான், டெக் மகேந்திர , ஹெச்சிஎல், பிவ்சி , ட்ரிகென்ட், பிளிப்கார்ட், Siemens, Deloitte, Oracle, Zensar, டிசிஎஸ், Capgemini போன்ற நிறுவனங்கள் அதிகளவில் தற்காலிக மற்றும் நிரந்தர வேலைக வாய்ப்புகளை மக்களுக்கு வழங்குகின்றன.

Naukri.com-ன் தலைமை வணிக அதிகாரி பவன் கோயல் கூறுகையில் ஒரு அறிக்கையில், "பணியமர்த்துபவர்கள் பணியாளர்களின் நலனுக்காக சில கட்டமைப்பு வசதிகளை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளனர்.  தொற்றுநோய் காரணமாக பலரும் வேலையில்லாமல் திண்டாடி வந்தாலும், அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் அவர்களின் அறிவு மற்றும் திறமைக்கான அங்கீகாரத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.  தற்போது பணியமர்த்துபவர்கள் கார்ப்பரேட் தரத்தில் மனித வளம் மற்றும் உள்கட்டமைப்புத் தேவைகளில் நிரந்தர மாற்றங்களைச் செய்யத் தொடங்கியுள்ளனர்," என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | உங்கள் புத்தி கூர்மையை கண்டு பிறர் வியக்க சில எளிய ஜோதிட பரிகாரங்கள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News