India Post GDS Recruitment: இந்திய அஞ்சல் துறையில் காலியாக இருக்கும் சுமார் 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வெளியான நிலையில், அதற்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி நெருங்கிவிட்டது. வேலை தேடி வரும் நீங்கள், இதுகுறித்து இதற்கு முன்னர் கேள்விப்படவில்லை எனில், இதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் மூலம், விரைவாக இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்,
கிராமின் தக் சேவக்ஸ் (GDS) பணியிடத்திற்கான விண்ணப்பம் கடந்த ஜன. 27ஆம் தேதி தொடங்கியது. இந்த GDS பணியிடம் மூலம், கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM), அசிஸ்டெண்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க, பிப். 16ஆம் தேதி கடைசி நாள் என இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. மேலும், விண்ணப்பித்தில் பிழையை திருத்த பிப். 17ஆம் முதல் பிப். 19ஆம் தேதிவரை வாய்ப்பளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
அஞ்சல் துறையிலும் கல்வித்தகுதி என்பது மிகவும் அவசியமானதாகும். இருப்பினும், குறைந்தபட்சம், இதற்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பை நிறைவு செய்திருந்தால் போதும். மேலும், 10ஆம் வகுப்பில் ஆங்கிலத்திலும், கணிதத்திலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் படிக்க | EBay Layoffs 2023: ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியது ஈபே! அதிரடி பணிநீக்கம்
மேலும், இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களின் உள்ளூர் மொழியை குறைந்தது 10ஆம் வகுப்பு வரையில் கற்று தேர்ந்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேற்கூறிய கல்வித்தகுதி உடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு நிச்சயம் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வயது வரம்பும் இந்திய அஞ்சல் துறையால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2023, பிப். 16ஆம் தேதி அன்று, குறைந்தபட்சம் 18 வயதுடையவர்களும், அதிகபட்சமாக 40 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா அஞ்சல் துறையின் ஆட்சேர்ப்பில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும். பெண்கள், பட்டியல் சமூகத்தினர், பட்டியல் பழங்குடியினர், PwD, மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தகுதியானவர்கள் www.indiapostgdsonline.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வேறு எந்த முறையிலும் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | விவசாயிகளுக்கு நற்செய்தி! ரூ.50 முதலீடு செய்து ரூ.35 லட்சத்தை பெறுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ