பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நீங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளராக இருந்து, வீட்டுக் கடன் அல்லது வேறு ஏதேனும் கடன் வாங்கியிருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. உண்மையில், பஞ்சாப் நேஷனல் வங்கிக்குப் பிறகு, இப்போது பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் கடன்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த முறை பிஎன்பி ஹவுசிங் வீட்டுக் கடனுடன் சேர்த்து பல சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.35 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிய கட்டணங்கள் இன்று முதல் அதாவது மே 9 முதல் அமலுக்கு வந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங்கின் கீழ், வாடிக்கையாளர்கள் வீடு கட்டுவதற்கும், வீடு வாங்குவதற்கும் கடன் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சில்லறை வணிகம் மற்றும் கார்ப்பரேட் ஆகிய இரண்டுக்கும் பங்கு உண்டு. ஆனால் இப்போது வாடிக்கையாளர்கள் இதற்கு அதிக இஎம்ஐ செலுத்த வேண்டியிருக்கும். இது தவிர புதிதாக கடன் வாங்குபவர்கள் அதிக வட்டி செலுத்த வேண்டும். முன்னதாக, கடந்த மே 7 ஆம் தேதி பிஎன்பி வங்கியும் அதன் வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அமேசானையே அலறவிட்ட ஹேக்கர்ஸ்!- நெட்டிசன்ஸ் ஷாக்!
பஞ்சாப் நேஷனல் வங்கி முக்கிய தகவலை அளித்துள்ளது
இது குறித்த விரிவான தகவலை பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் நிறுவனம் அளித்துள்ளது. அதன்படி, புதிய வட்டி விகிதங்கள் வெவ்வேறு தேதிகளில் இருந்து பொருந்தும். புதிய வாடிக்கையாளர்களுக்கான ஆர்.எல்.எல்.ஆர் மே 7, 2022 முதல் அமலுக்கு வந்தது. அதே நேரத்தில், தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கான ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதம் ஜூன் 1, 2022 முதல் 6.90 சதவீதமாக இருக்கும். அதிகரிக்கப்பட்ட இந்த வட்டி விகிதமானது ஜூன் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்த நடவடிக்கையானது பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில் வந்துள்ளது. முன்னதாக ஐசிஐசிஐ வங்கி, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இது மத்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை திடீரென 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்த நிலையில் அதிகரித்துள்ளது.
கடனுக்கான விகிதம் மட்டும், அல்ல, சேமிப்பு டெபாசிட்களுக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதமானது 2 கோடி ரூபாய்க்குள்ளான டெபாசிட்களுக்க்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதமானது 5.10 - 5.15 சதவீதம் வரையில் அதிகரிக்கபபட்டுள்ளது.
மேலும் படிக்க | இனி போன்களில் சிம் கார்டுகள் போட முடியாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR