பிக்பாஸ் 2! நிகழ்ச்சி பங்கேற்பை குறித்து சிம்ரன் டிவீட்!

நான் எந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என நடிகை சிம்ரன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Last Updated : Jun 19, 2018, 03:29 PM IST
பிக்பாஸ் 2! நிகழ்ச்சி பங்கேற்பை குறித்து சிம்ரன் டிவீட்! title=

நான் எந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என நடிகை சிம்ரன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. தற்போது இரண்டாவாது சீசனை அவரே தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சி நாளை மாலை 7 முதல் துவங்க உள்ளது.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில், பல பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். அதில் பிரபல நடிகை சிம்ரனும் ஒருவர் என தகவல்கள் வெளியாகின. சில போட்டோக்களும் சமூக வளைத்தளத்தில் பரவியது. 

இந்த நிலையில், சிம்ரன் இன்று வெளியிட்ட டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:- 

சில ஷோக்களில் நான் பங்கேற்க போவதாக வெளியாகும் தகவல்கள் ஆச்சரியம் அளிக்கிறது. போட்டோஷாப் மூலம் மார்ப் செய்யப்பட்ட போட்டோக்கள் ஒரு குட் ஜாப். சமீபத்தில் எந்த டிவி நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்கவில்லை. வருங்காலத்திலும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க போவதுமில்லை. தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள். 

 

 

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Trending News