பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை காலையில் எழுப்புவதற்குள் பெற்றோர்களுக்கு போதும் போதும் என்றாகி விடும். அதிலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலைக்கு செல்லும் பெற்றோர்களுக்கு, இது மிகவும் கடினமான டாஸ்காக இருக்கும். குழந்தைகளை காலையில் எழுப்புவது சிரமம்தான், இதனால் பல பெற்றோர்கள் குழந்தைகளிடம் கோபமாக பேசுவது, மிரட்டுவது, அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர். இது, குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிப்பதோடு, அவர்களை பெற்றோர்களிடம் இருந்து விலக்கி வைத்து விடும். குழந்தைகளை துன்புறுத்தாமல், காலை பொழுதை அவர்களுக்கு இனிமையான பொழுதாக மாற்றுவது எப்படி? இங்கே பார்ப்போம்.
1.தூக்கத்தை முதன்மை படுத்த வேண்டும்:
பெரும்பாலான குழந்தைகள் இரவில் வெகு நேரம் கழித்து தூங்க போவதும், படுத்த பிறகு வெகு நேரம் தூங்காமல் இருப்பதும்தான் காலையில் அவர்கள் மிகவும் தாமதமாக எழ காரணமாக இருக்கும். குழந்தைகள் விளையாட்டு குணத்துடன் இருப்பதாலேயே இது நேர்கிறது. இதை தவிர்க்க, குழந்தைகளுக்கு தூங்கும் நேரத்தை நிர்ணயிக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் வயதை பொறுத்தும் அவர்கள் தூங்கும் மணி நேரங்கள் வேறுபடும். உதாரணத்திற்கு 3-5 வயதுள்ள குழந்தைகள் 11-13 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் 6-13 வயது வரையுள்ள குழந்தைகள் 9-11 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்று கூறுகின்றனர். எனவே, அத்தனை மணி நேர உறக்கம் உங்கள் குழந்தைகளுள் பெற்றுள்ளனரா என்பதை பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | பெற்றோர்களுக்கான டிப்ஸ்: குழந்தைகள் பொய் கூறினால் என்ன செய்யலாம்..?
2.சூரிய ஒளியால் அவர்களை எழ செய்யுங்கள்:
இரவில் இருட்டாவது தூகத்திற்கு எப்படி உதவுகிறதோ, அதே போல காலை வெயிலும் வெளிச்சமும் அந்த தூக்கத்தில் இருந்து எழுந்திருக்க உதவும். அதனால், காலையில் வரும் இயற்கையான சூரிய ஒளியால் உங்கள் குழந்தைகளை எழுந்திருக்க வையுங்கள். அவர்கள் உறங்கும் அறையில் இருக்கும் ஜன்னல்களில் இருந்து காலை சூர்ய ஒளி அவர்கள் மீது படுவதற்கு வழி வகை செய்யுங்கள். இந்த பழக்கத்தை ஏற்படுத்தி விட்டால், சூர்ய ஒளி ஒரு நாள் வரவில்லை என்றால் கூட அவர்கள் அந்த நேரத்தில் காலையில் கண்டிப்பாக எழுந்திருப்பார்கள்.
3.இசையை ஒலிக்க விடுங்கள்..
குழந்தைகளை காலையில் இனிமையாக எழுப்ப, அவர்களுக்கு பிடித்த மாதிரியான இசையை ஒலிக்கலாம். இது, அவர்களுக்கு பிடித்த ஏதேனும் குழந்தைகள் பாடலாக இருக்கலாம். இல்லை, அடிக்கடி அவர்கள் டிவியில் விரும்பி கேட்கும் பாடலகாக இருக்கலாம். நம் மன நிலையை மாற்றும் திறன், இசைக்கு உள்ளது. காரணமே இன்றி, ஒரு சோகமான இசையை கேட்கும் போது நாமும் சேர்ந்து சோகமாகிறோம் அல்லவா? அது போல குழந்தைகளின் காலை மன நிலையையும் இசை மாற்றும். இது, அவர்களை காலையில் எழ வைக்க ஊக்கமளிக்கும் என்று கூட சொல்லலாம்.
4.குழந்தைகள் எழுந்திருக்க நேரம் கொடுங்கள்..
குழந்தைகளுக்கு தூக்கம் கலைந்தாலும் படுக்கையில் இருந்து எழுந்திருக்க மனம் வராது. நாம் எழுந்திருக்க சொல்லி கூறும் போது இதனாலேயே சமயங்களில் தூங்குவது போல நடிப்பர். இதனால் அவர்களை படுக்கையில் இருந்து எழுப்ப, வேறு சில முறைகளை கையாளலாம். அவர்ள் அருகில் சென்று பாசமான வார்த்தைகளை கூறலாம். அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து வைத்திருக்கிறேன் என்று கூறலாம். இதனால் அவர்களுக்கு அந்த நாளுக்கான ஆர்வம் பிறந்து படுக்கையில் இருந்து எழுந்திருப்பர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ