கொரோனா வைரஸின் 3வது அலை இந்தியாவில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. தமிழகம் மற்றும் டெல்லி ஆகியவை தங்கள் மாநிலங்களில் கொரோனா 3வது அலை உருவாகிவிட்டதாக அறிவித்துவிட்டன. இதனால், அனைவரும் விழிப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம். இதில் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஏற்கனவே அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
முகக்கவசம் அணிவது முதல் தனிநபர் இடைவெளி கடைபிடிப்பது வரை என அனைத்தையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். வெளியில் எங்கு சென்று வீடு திரும்பினாலும் உடனே குளித்து விடுவது நல்லது. இல்லையென்றால், குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
கொரோனாவைப் பொறுத்தவரை எங்கு இருக்கிறது? எப்படி பரவுகிறது? என்று இதுவரை யாராலும் உறுதியாக கூற முடியவில்லை. மக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? என்றால், தூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும் என நினைத்துக் கொண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பது மட்டுமே நமக்கு இருக்கும் ஒரே வழி. அதேநேரத்தில் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்லும்போது பொதுக்கழிவறையை பயன்படுத்த வேண்டிய சூழல் இருக்கும்.
அத்தகைய சமயங்களில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் வெளியே செல்லும்போது ஒரு டிஸ்யூ பேப்பரை கூடவே எடுத்துச் செல்லுங்கள். அந்த டிஸ்யூ பேப்பரை பயன்படுத்தி கழிவறை கதவு, பைப் மற்றும் மக்குகளை எடுக்க உபயோகிப்பது சிறந்தது. இதனை நீங்கள் மட்டும் கடைபிடிக்காமல் மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவராக இருந்தால், நீங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டில் இருப்பவர்களிடம் கழிவறையை தூய்மையாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளுங்கள். மேலும், எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதையும் சொல்லிக் கொடுங்கள். அதாவது, ஒவ்வொரு முறை செல்லும்போது கிருமி நாசினியை பயன்படுத்துவது, கழிவறையை சுத்தம் செய்துவிட்டு திரும்புவது ஆகியவற்றை சொல்லிக் கொடுத்தால், இது அவர்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் உடல் நலனுக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR