கையில் வெச்ச மருதாணி செக்கச்செவேல் என செவக்கனுமா? ‘இதை’ பண்ணுங்க!!

Mehandhi Henna Applying Tips : கைகளில் வைக்கும் மருதாணியை எப்படி செவக்க வைக்க வேண்டும் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Sep 9, 2024, 05:50 PM IST
  • மருதாணி வைக்க டிப்ஸ்
  • கையில் வைப்பதை எப்படி சிவக்க வைப்பது?
  • இதோ சூப்பர் வழி!!
கையில் வெச்ச மருதாணி செக்கச்செவேல் என செவக்கனுமா? ‘இதை’ பண்ணுங்க!! title=

Mehandhi Henna Applying Tips : விழாக்கலாங்களிலும், வீட்டில் விஷேஷம் இருக்கும் சமயங்களிலும் நம்மில் பலர் கைகளில் மருதாணி வைப்பதை வழக்கமாக கொண்டிருப்போம். புதிய ஆடை உடுத்துகையில், நேற்று வைத்த மருதாணியை அப்படி நுகர்ந்து பார்த்து அந்த வாசனையில் லயித்து கிடப்பதும் ஒரு வித போதைதான். 

ஒரு சில பேருக்கு, இந்த மருதாணியை டிசைன் டிசைனாக வைத்துக்கொள்வது பிடிக்கும். ஒரு சிலருக்கு, அந்த மருதாணியை வெறும் தட்டையாக வைத்து, நகங்களிலும் விரல்களின் நுணிகளிலும் பூசிக்கொள்வது பிடிக்கும். 

இப்படி, மருதாணிக்கு வெவ்வேறு வடிவம் கொடுப்பது நம் கைகளில்தான் இருக்கிறது. ஆனால் இதைத்தாண்டி, ஒரு சிலருக்கு கைகளில் மருதாணி வைத்தால் அது செவக்காமலே போய் விடும். அப்படி ஆகாமல், வைத்த மருதாணி எப்படி செக்கச்செவேல் என கைகளில் பிடிக்க நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 

மருதாணி பவுடர்:

>நாம் எந்த மருதாணி தூளை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை பொறுத்தும் கைகளில் மருதாணி சிவப்பது அமையும். இதனால், நாம் சரியான மருதானி பவுடரை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம் ஆகும். தலைக்கு அடிக்கும் சாயத்தின் ரசாயனம் நிறைந்த மருதாணி பவுடரை வாங்கலாம். இவை, கைகளில் வைக்கும் மருதாணி நன்கு சிவக்க உதவுமாம். 

>சுத்தமான மருதாணி பவுடரை வாங்குவது மிகவும் அவசியம். எந்த ஃபில்டர் மற்றும் அதிக ரசாயனங்கள் உபயோகிக்கப்பட்ட மருதாணி பவுடர்களை வாங்க கூடாது. 

பலமான மருதாணியை தயார் செய்தல்:

>நல்ல, தரம் வாய்ந்த மருதாணி பவுடரை வாங்கிய பிறகு அதில் (அளவுக்கு ஏற்ப) எலுமிச்சை சாறு, ப்ளாக் டீ ஆகியவற்றை போட்டு ஊற வைக்க வேண்டும். கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதை பேஸ்ட் போல ஆக்கிக்கொள்ள வேண்டும்.

>நீலகிரி தைலம் (eucalyptus oil) சேர்த்து அந்த மருதாணியை ஊற வைக்க வேண்டும்.

>12 முதல் 20 மணி நேரம் வரை அந்த மருதாணி பேஸ்டை ஊற வைத்த பிறகு கைகளில் அதை வைத்துக்கொள்ளலாம். 

எப்படி வைக்க வேண்டும்?

>மருதாணி, உங்கள் கைகளில் நன்றாக சிவக்க அதனை அடர்த்தியாக உங்கள் கைகளில் வைக்க வேண்டும். அப்போதுதான் அதன் வண்ணம் உங்கள் கைகளில் நன்றாக பிடிக்கும். 

>மருதாணி வைத்தவுடன், அதை தொடுவதை, எடுப்பதை தவிர்க்கவும். 

மேலும் படிக்க | பிரபலங்கள் ஏன் அதிகமாக விவாகரத்து செஞ்சுகிறாங்க தெரியுமா? 8 முக்கிய காரணங்கள்

மருதாணியை எடுத்த பிறகு என்ன செய்ய வேண்டும்?

>கைகளில் மருதாணி வைத்தவுடன், எவ்வளவு நேரம் அதை கைகளில் வைத்திருக்க முடியுமோ, அவ்வளவு நேரம் வைத்திருக்க வேண்டும். 6-8 மணி நேரம் அல்லது ஓர் இரவு வைப்பது சிறந்ததாகும். 

>கைகளில் மருதாணி வைத்தவுடன் தண்ணீரில் கைகளை வைப்பதை தவிர்க்கவும். மருதாணியை கைகளில் இருந்து கழுவியவுடன் அவசியம் இன்றி, தண்ணீரில் கைகளை வைக்க வேண்டாம். 

>மருதாணியை கழுவிய பின்பு, எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை கலந்து கைகளில் தெளிக்கவும். இது, உங்கள் கைகளில் இருக்கும் கலரை இன்னும் ஆழமானதாக ஆக்கும். 

>கைகளில் சூடு காண்பிப்பதாலும் மருதாணியின் நிறம் ஆழமாக மாறுமாம். உதாரணத்திற்கு சுடு தண்ணீரில் இருந்து வரும் மிதமான ஆவி போன்ற வெதுவெதுப்பான இடத்தில் கைகளை வைக்கலாம். ஆனால், கைகளில் சூடு படும்படி எந்த இடத்திலும் வைத்துவிடாதீர்கள். 

மேலும் படிக்க | புது மருமகளிடம் இந்த 5 விஷயங்களை எதிர்பாக்காதீங்க - மாமியார்களே முக்கியமா நோட் பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News