புதிதாக நேர்காணலை சந்திப்போர் மட்டுமன்றி, பெரிய நிறுவனத்திற்கு நேர்காணலிற்காக செல்பவர்கள் வரை பலரும் சந்திக்கும் ஒரு பெரிய கேள்வி, “எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?” என்பதுதான். இதற்கு பதில் கூறுவதற்கு, அனைவரும் தடுமாறுவது சகஜம். இந்த பதிலை எப்படி எதிர்கொள்வது?
நேர்காணலுக்கான கேள்விகள்..
புதிதாக வேலைக்கு செல்பவர்களிடம் பெரும்பாலும், கேட்கப்படும் கேள்விகள் பல உள்ளன. “உங்கள் பெயர் என்ன?” என்ற கேள்வியில் ஆரம்பித்து, “குடும்ப பின்னணி என்ன?” என்பதில் தொடர்ந்து, “என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீங்க?” என்பதில் முடியும் இந்த நேர்காணல். இதற்கு முதலில் பலர் தடுமாறுவதுண்டு. இவ்வளவு ஏன்? பலமுறை நேர்காணல்களை சந்தித்தவர்களே இந்த கேள்விக்கு தடுமாறி பதில் கூறுவதுண்டு.
நேர்காணல் என்றாலே பயப்படுவோர், இந்த கேள்வி எழும் போது “நம்மை தவறாக எடைபோட்டு வேலை கொடுக்காமல் போய்விடுவார்களோ என்ற பயத்தில் தேவைப்படும் சம்பளத்தை விட மிகவும் குறைவாக கேட்டு விடுவர். எதிரில் இருப்பவர்களில் ஒரு சிலர், “இதுதான் சான்ஸ்” என்று நினைத்து, அவர்கள் கேட்டிருக்கும் சம்பளத்தை விட இன்னும் குறைவாகவே தர முடியும் என்று கூறுவர். ஆனால், அந்த Job Role-ற்கு அதை விட அதிக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இந்த கேள்வியை புத்திசாலித்தனமாக சமாளிப்பது எப்படி? இதற்கு ஏற்ற பதில் என்ன?
விடை இதோ..!
“எவ்வளவு சம்பளம் எதிர்ப்பர்க்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு, எனக்கு இந்த தொகை சம்பளமாக வேண்டும், அந்த தொகை சம்பளமாக வேண்டும் என்று கூறி விட கூடாது. நீங்கள் விண்ணப்பித்திருக்கும் வேலைக்கான அனைத்து திறன்களும் என்னிடம் உள்ளன. அதனால், இந்த வேலையில் என்னால் சிறப்பாக செயல்பட முடியும். என் திறனை பொறுத்து, இந்த வேலைக்கான சம்பளத்தை கொடுங்கள், என்று கூறலாம். அல்லது, நீங்கள் ஏற்கனவே ஒரு வேலையில் இருந்து இந்த வேலைக்கு செல்கிறீர்கள் என்றால், அந்த தொகையை விட அதிகமாக கேட்கலாம். இதனால், உங்களுக்கு வேலை கிடைப்பதோடு சம்பளமும் உயரும். நீங்கள் ஒரு தொகையை கேட்டு அதற்கு எதிரில் இருக்கும் நிறுவனத்தார் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், ஏற்கனவே நீங்கள் இருந்த வேலையில் செய்திருக்கும் சாதனைகளை காண்பிக்கலாம். உங்களால், பழைய நிறுவனத்திற்கு எந்த அளவில் வளர்ச்சி ஏற்பட்டது என்பதை எடுத்துரைக்கலாம். இதனால், நீங்கள் கேட்கும் சம்பளத்திற்கு அவர்கள் ஒப்புக்கொள்ள வாய்ப்புகள் உண்டு.
மேலும் படிக்க | கூகுள் மேப் மூலம் சம்பாதிப்பது எப்படி?
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்..
நேர்காணல்களில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என சில இருக்கின்றன. ஆனால், இவையும் கொஞ்சம் வம்பான கேள்விகளே. அவை என்னென்ன வினாக்கள்? இவற்றிற்கு எவ்வாறு விடையளிக்க வேண்டும்? இங்கு பார்க்கலாம்.
உங்களிடம் இருக்கும் ப்ளஸ் மற்றும் மைனஸ் என்ன?
நேர்காணல் செய்பவர்கள், தன்னிடம் வேலைக்கு வந்திருப்பவர்கள் அவர்களை அவர்களே நன்கு புரிந்து வைத்திருக்கிறார்களா என்று ஆராய்வதற்காக கேட்கும் கேள்வி இது. எனவே, உங்களிடம் இருக்கும் பலத்தையும் பலவீனத்தையும் நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் நன்று. நம்மிடம் இருக்கும் பலத்தை தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் கூறலாம். பலவீனத்தை கூறி, “அதை திருத்திக்கொள்ள தினம் தினம் முயற்சி செய்கிறேன், முன்னர் இருந்ததை விட நிறையவே இந்த விஷயத்தில் மாறியிருக்கிறேன்” என்று கூறலாம்.
இந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவர் தானா? அல்லது உங்களுக்கு நான் ஏன் வேலை தர வேண்டும்?
நீங்கள் விண்ணப்பித்திருக்கும் வேலையின் Job Description-ஐ பொறுத்து இதற்கான பதிலை நீங்கள் கூற வேண்டும். உதாரணத்திற்கு, நீங்கள் கணக்காளர் (accountant) வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறீர்கள் என்றால், கணக்காளர் வேலைக்கு சேருபவர், என்னென்ன திறன்கள் வேண்டுமோ அவை உங்களிடம் இருந்தால் இந்த திறன் எல்லாம் என்னிடம் இருக்கிறது என்று கூறுங்கள். உதாரணத்திற்கு, கணக்காளர்கள் உபயோகிக்கும் Tally, Zoho books, SAP போன்றவை உங்களுக்கு தெரிந்திருந்தால், இதேல்லாம் எனக்கு தெரியும் அதனால் நான் இந்த வேலைக்கு தகுதியான ஆள்தான் என்று நீங்கள் கூறலாம். நீங்கள் கூறும் எந்த பதிலும் பொய்யாக இருக்க கூடாது.
மேலும் படிக்க | எளிதில் வேலை கிடைக்க எந்த திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.? இந்த டிப்ஸை படிங்க..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ