மாத சம்பளம் வாங்குபவர்கள் PF கணக்கில் இருக்கும் பணத்தை சரி பார்ப்பது எப்படி?

உங்களின் PF கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கும், எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை சரிபார்ப்பதற்கும் இணைய சேவையை மத்திய அரசு வழங்குகிறது.  

Written by - RK Spark | Last Updated : Nov 20, 2023, 05:33 PM IST
  • PF பணம் உங்கள் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படுகிறது.
  • ஓய்வு பெற்ற பிறகு இதனை நீங்கள் எடுத்து கொள்ளலாம்.
  • அவசர தேவைகளுக்கும் இதனை நீங்கள் எடுக்க முடியும்.
மாத சம்பளம் வாங்குபவர்கள் PF கணக்கில் இருக்கும் பணத்தை சரி பார்ப்பது எப்படி?  title=

நீங்கள் மாத சம்பளம் வாங்கும் பணியாளராக இருந்தால், உங்கள் சம்பளத்தில் இருந்து PF பணம் பிடிக்கப்படலாம்.  பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) உங்கள் சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் எடுக்கப்படும் பணத்தை உங்கள் PF கணக்கில் வரவு வைப்பார்கள். மேலும் உங்கள் முதலாளியின் பங்களிப்பை வரவு வைப்பதும் கட்டாயம் ஆகும்.  பணியாளர் தங்கள் EPF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.  

PF இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம்?

UAN (யுனிவர்சல் அக்கவுண்ட் எண்) மூலம் கணக்கை சரி பார்க்க முடியும், ஒருவேளை UAN உங்களிடம் இல்லை என்றாலும் உங்களால் PF இருப்பை சரிபார்க்க முடியும்.

- 9966044425 என்ற மொபைல் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து செக் செய்யலாம்.

- 7738299899 என்ற மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பி செக் செய்யலாம்.

- EPFO ​​ஆன்லைன் போர்ட்டலை பயன்படுத்தி செக் செய்யலாம்.

- UMANG மொபைல் ஆப் பயன்படுத்தி செக் செய்யலாம்.

மேலும் படிக்க | மாதா மாதம் 1 லட்சம் ஓய்வூதியம்: அள்ளித்தரும் NPS... இப்படி முதலீடு செய்தால் போதும்

UAN நம்பர் மூலம் EPF இருப்பை எப்படி சரிபார்க்கலாம்?

EPF கணக்கை சரிபார்க்க, முதலில் உங்கள் பெயரில் உலகளாவிய கணக்கு எண் (UAN) உள்ளதா என்பதை சரி பார்க்கவும்.  UAN என்பது EPF திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட, ஊழியர்களுக்கு வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண் ஆகும். நீங்கள் ஓய்வு பெரும் வரை எத்தனை நிறுவனம் மாறினாலும், உங்களின் UAN மாறாது.  EPF சேவைகள் தொடர்பான அனைத்து செயல்முறையும் இப்போது ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளதால் UAN எண் முக்கியமானது. பின்வரும் வழிகளின் மூலம் UAN மூலம் உங்கள் கணக்கை சரி பார்க்கலாம்.

படி 1: EPFO ​​போர்ட்டலுக்குச் சென்று 'Our Services' என்பதை கிளிக் செய்து, மெனுவிலிருந்து "For Employees" என்பதை தேர்ந்தெடுக்கவும்.
படி 2: இப்போது, ​​"Services" என்பதன் கீழ் உள்ள 'Member passbook' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
படி 3: பிறகு, உங்கள் UAN எண் மற்றும் கடவுச்சொல் உள்ளிடவும்.
படி 4: 'Member ID'யைத் தேர்ந்தெடுத்து, View Password விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
படி 5: உங்கள் PF விவரங்கள் திரையில் காட்டப்படும்.
படி 6: 'Download Passbook' விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் பாஸ்புக்கை டவுன்லோடு செய்யலாம்.

UAN நம்பர் இல்லை என்றால் எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் EPF இருப்பு சரிபார்க்கலாம். 

'EPFOHO UAN ENG' என்று டைப் செய்து 7738299899 என்ற மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பவும்.

உங்களுக்கு விருப்பமான தகவல்தொடர்பு மொழியை SMSல் அமைக்க வேண்டும். அவ்வாறு செய்ய உங்களுக்கு விருப்பமான மொழியின் முதல் மூன்று எழுத்துக்களைப் பயன்படுத்தவும். நீங்கள் ஆங்கிலத்தில் அப்டேட்களை பெற விரும்பினால், ஆங்கிலம் என்ற வார்த்தையின் முதல் மூன்று எழுத்துக்களைப் பயன்படுத்தவும், அதாவது EPFOHO UAN ENG. நீங்கள் தமிழில் பெற விரும்பினால், EPFOHO UAN TAM என டைப் செய்யவும்.  இந்த வசதி பின்வரும் மொழிகளில் கிடைக்கிறது:

ஆங்கிலம் (ENG), இந்தி (HIN), பஞ்சாபி (PUN), குஜராத்தி (GUJ), மராத்தி (MAR), கன்னடம் (KAN), தெலுங்கு (TEL), தமிழ் (TAM), மலையாளம் (MAL) மற்றும் பெங்காலி (BEN)

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும். இதன் மூலம் உங்களின் EPF இருப்பு குறித்து விசாரிக்கலாம். உங்கள் KYC விவரங்களுடன் உங்கள் UAN ஐ ஒருங்கிணைத்தால் மட்டுமே இந்த சேவை கிடைக்கும். மொபைல் எண் சேவை மூலம் EPF இருப்புச் சரிபார்ப்பைப் பெறுவதற்கு நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

மேலும் படிக்க | 50,100,200,500 ரூபாய் நோட்டு... ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய தகவல்: உடனே தெரிந்துகொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News