PF எவ்வாறு கணக்கிடப்படுகிறது?அதன் முழு விவரம்!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அல்லது மத்திய அரசின் உயர்மட்ட ஓய்வூதிய அமைப்பான இபிஎஃப்ஓ ஊழியர்களுக்காக ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளது.   

Written by - RK Spark | Last Updated : May 22, 2022, 12:08 PM IST
  • ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் பிஎப் தொகை பிடிக்கப்படுகிறது.
  • ஓய்வு பெற்ற காலத்தில் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.
  • பணிபுரியும் ஊழியர்களின் குறைந்தபட்ச பங்களிப்பு ஊதியத்தில் 12% ஆகும்.
PF எவ்வாறு கணக்கிடப்படுகிறது?அதன் முழு விவரம்! title=

இந்தியாவில் சம்பளம் பெறுபவர்கள் அனைவரும் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கணக்கு வைத்துள்ளனர். இதில் சேமிக்கப்படும் தொகையானது அவர்களின் வயது முதிர்விற்கு பின்னர் வருமானம் தரும் ஒன்றாக அமைந்துள்ளது.  பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களின் மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையானது பிடித்துக்கொள்ளப்படுகிறது, அந்த தொகை ஓய்வுக்கு பின்னர் அதே அளவு பணம் அந்த ஊழியர்களுக்கு நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும்.  

மேலும் படிக்க | எலக்ட்ரிக் வாகனத்திற்கு அதிரடி லோன் ஆபர்களை வழங்கும் வங்கி!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அல்லது மத்திய அரசின் உயர்மட்ட ஓய்வூதிய அமைப்பான இபிஎஃப்ஓ, ஊழியர்களுக்காக ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளது.  இதனால் அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அதில் இருந்து பெறப்பட்ட கார்பஸ் திரும்பப் பெற முடியும்.  பணிபுரியும் ஊழியர்களின் குறைந்தபட்ச பங்களிப்பு ஊதியத்தில் 12% ஆகும், ஆனால் ஊழியர்கள் 100% வரை பங்களிக்கலாம்.  இரண்டு பங்களிப்புகளும் ஒன்றாக சேர்க்கப்பட்ட பிறகு ஊழியர்களது பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் வட்டி தொகையை பெறுவார்கள்.  

தற்போதுள்ள நிலமைப்படி அரசாங்கம் இபிஎஃப் பங்களிப்புகளுக்கு 8.5% வட்டி விகிதங்களை வழங்குகிறது.  அரசாங்கம் வட்டி விகிதத்தை அறிவித்ததும் இபிஎஃப்ஓ மாத வாரியாக நிலுவை தொகையை கணக்கிடுகிறது.  ஒவ்வொரு மாதமும் இருப்பில் கிடக்கும் பணத்தை கூட்டுவதன் மூலம் வட்டி கணக்கிடப்படுகிறது.  பின்னர் அது வட்டி விகிதத்துடன் பெருக்கப்பட்டு, 1200ஆல் வகுக்கப்படுகிறது.  எடுத்துக்காட்டாக, வட்டி விகிதம் 8.1 சதவீதம் மற்றும் மாதாந்திர இருப்புத் தொகை ரூ 10,00,000 எனில், வட்டித் தொகை 1104740x 8.1/1200= ரூ 6,750 ஆக இருக்கும்.

மேலும் படிக்க | PPF vs Mutual Funds: உங்களுக்கு ஏற்ற முதலீட்டு முறை எது? முழு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News