டீன் ஏஜ் இளசுகளே காதலியை கவர்ந்திழுக்க 6 வசீகர டிப்ஸ்...!

Relationship tips : மனசுக்கு பிடித்தமானவர்களின் கவனத்தை உங்கள் மீது திசை திருப்ப, அவர் உங்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என விரும்பினால் அதற்கு உங்களின் அணுகுமுறை அவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருக்க வேண்டும். 

Last Updated : Aug 14, 2024, 06:26 AM IST
  • பிரியமானவர்களின் கவனத்தை பெற டிப்ஸ்
  • இந்த விஷயங்கள் அன்பை அதிகரிக்கும்
  • 6 விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்
டீன் ஏஜ் இளசுகளே காதலியை கவர்ந்திழுக்க 6 வசீகர டிப்ஸ்...!  title=

Relationship tips : பதின்பருவ வயதில் ஆண், பெண் இருபாலருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு வருவது சகஜம் தான். ஆனால் பிடித்தமானவர்களின் கவனத்தை பெறுவது என்பது தான் கொஞ்சம் சவாலான விஷயம். காதலன் அல்லது காதலி தனக்கு பிடித்தமானவர்களை தங்களின் வசீகர வழிக்கு கொண்டு வர வேண்டும் என நினைக்கும்போது, என்ன செய்யலாம் என பல யோசனைகளை செய்வார்கள். அவர்களுக்கு அந்த நேரத்தில் ஒரு யோசனையும் வசப்படாது என்பதே நிதர்சனம். 

ஆனால், ஒருவர் மீது உங்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்றால் சின்ன சின்ன விஷயங்கள் அதனை பெற்றுக் கொடுத்துவிடும். அந்த விஷயங்கள் தான் வசீகர சூத்திரமும்கூட. அதனை நீங்கள் பின்பற்றினால், உங்களின் வசீகரமும் பிரியமானவரின் கவனத்தை நிச்சயம் பெற்றுக் கொடுக்கும். 

பிரியமானவரின் கவனத்தை பெற 6 வசீகர டிப்ஸ் :

1. நகைச்சுவை

உங்களை சிரிக்க வைக்கும் நபர்களுடன் தான் நீங்களே இருக்க விரும்புவீர்கள். அதனால், எப்போதும் சிரிக்க வைப்பதை வாடிக்கையாக வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பிடித்தமானவரின் மனசு நெகிழும் வகையில் உங்களின் நகைச்சுவைகள் இருக்க வேண்டும். எந்தவொரு நகைச்சுவையும் புண்படுத்தாமல், அவர்களே மெச்சும்படி இருக்க வேண்டும். 

மேலும் படிக்க | கண்ணாடி vs காண்டாக்ட் லென்ஸ் - எது பெஸ்ட்? - மருத்துவர்கள் கூறுவது என்ன?

2. மாஸ்க் வேண்டாம்

ஒருவரின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக எந்தவொரு முகமூடியும் உங்களுக்கு வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருக்கவும். உங்களுக்கு ஒத்துப்போகாத விஷயங்களை முயற்சி செய்யும்போது, பிடித்தமானவருக்கும் ஈர்ப்பு இல்லாமல் போகும். இயல்பாக நேரடியாக அவர்களுடன் பழகுங்கள். இந்த உண்மையான அணுகுமுறை நெருக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். 

3. ஆர்வங்களுக்கு முக்கியத்துவம்

பிடித்தமானவர்களின் ஆர்வங்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்ன பிடிக்கும், எந்த மாதிரியான விஷயங்களில் நேரத்தை செலவிட விரும்புகிறார் என புரிந்து கொண்டு அப்போது அவர்களுடன் உடன் இருக்கும்போது, அவர்களின் மகிழ்ச்சி உங்களின் மீதான அன்பை அதிகப்படுத்தும். 

4. எல்லைகளை மதித்தல்

காதலன் அல்லது காதலியின் எல்லைகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஒருபோதும் அவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். சில விஷயங்களை பிரைவசியாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். அதனை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி சங்கடத்தை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். அவர்களுக்காக தோன்று நேரத்தில் அந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். அதுவரை பொறுமை காக்க வேண்டும். 

5. பாராட்டுகள் இருக்கட்டும்

சின்ன சின்ன விஷயங்களைக் கூட மனதார பாராட்டுங்கள். அவர்களின் மனது குளிரும் வரை பாராட்டுங்கள். அவர்களை பாராட்டுவதற்காக நீங்கள் வேடிக்கையாக பயன்படுத்தும் வார்த்தைகள் பிரியமானவரின் கவனத்தை உங்கள் மீது குவியச் செய்துவிடும். பாராட்டு எப்போதும் ஒருவருக்கு பிடித்தமான விஷயம் என்பதால் அதனை தவறாமல் செய்து கொண்டே இருங்கள். 

6. கண்கள் பேசட்டும்

எப்போது பிடித்தமானவரிடன் உரையாடும்போதும் உங்கள் கண்கள் அவர்களின் கண்களை நேராக நோக்க வேண்டும். உங்கள் கண்கள் அவர்களுடன் பேச வேண்டும். அழகான அந்த உரையாடல் உங்களின் நெருக்கத்தை அதிகரிக்கும். அப்போது புன்னகை செய்ய மறந்துவிடாதீர்கள். பிரியமானவரை பார்க்கும்போதெல்லாம் உங்களின் புன்னகை முகம் முழுவதும் பரவி இருக்க வேண்டும். இவையெல்லாம் பிரியமானவரின் அன்பை நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வசீகர சூத்திரங்கள். 

யார் ஒருவரின் அன்பையும் புண்படுத்தி பெற்றுவிட முடியாது. அவர்களின் அன்பையும் மரியாதையும் பெறுவதற்கு நீங்கள் அவர்களை மரியாதையாக நடத்த வேண்டும். அதுவே உங்கள் மீது மரியாதை வருவதற்கு காரணமாகும். 

மேலும் படிக்க | இந்த 5 விஷயங்களை செய்தால் உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News