நாட்டில் ஆதார் அட்டை எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அதேபோன்று பான் கார்டும் முக்கியமானதாக இருக்கிறது, வங்கிக் கணக்குகளைத் திறப்பது உட்பட பல முக்கிய விஷயங்களுக்கு பான் கார்டு முதன்மையானதாக பயன்படுகிறது. பான் கார்டுகள் மூலமாக வருமான வரித்துறை மக்களின் நிதி விவரங்களைக் கண்காணிக்கிறது, இந்த கார்டு பல அரசாங்க திட்டங்களுக்கு பயன்படுவதால் இதனை மக்கள் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். டிஜிட்டல் பான் கார்டை சில மணிநேரங்களில் பெறுவதற்கு ஃபினோ பேமெண்ட்ஸ் வங்கி புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த சேவைக்கு உங்களது ஆதார் விவரங்கள் மட்டுமே தேவைப்படும்.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அசத்தல் செய்தி: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியத் திட்டம்?
உங்களது ஆதார் அங்கீகாரத்திற்குப் பிறகு எந்தவொரு பயனறும் ஃபினோ வங்கி மையங்களின் உதவியுடன் அவர்களுக்கான பான் கார்டைப் பெறலாம், ஆதார் அட்டையை தவிர எந்தவித கூடுதல் ஆவணங்களும் இந்த செயல்முறைக்கு தேவைப்படாது. கூடுதலாக, நுகர்வோருக்கு பிஸிக்கல் மற்றும் டிஜிட்டல் பான் கார்டுக்கு இடையே விருப்பம் வழங்கப்படும், டிஜிட்டல் பான் கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த சில மணிநேரங்களுக்குள், தனிநபர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அவர்களின் டிஜிட்டல் பான் கார்டு அல்லது இ-பான் அட்டையுடன் கூடிய மின்னஞ்சல் அனுப்பப்படும் என்று ஃபினோ வங்கி இந்த செயல்முறை குறித்து தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பான் கார்டுகள் உலகம் முழுவதும் செல்லுபடியாகும் மற்றும் ஒவ்வொரு அதிகாரப்பூர்வ நோக்கத்திற்கும் பயன்படுத்தப்படலாம் அதனால் இதுகுறித்து மக்கள் எவ்வித கலக்கமும் கொள்ளத்தேவையில்லை. இருப்பினும் டிஜிட்டல் முறையில் பான் கார்டு பெற விரும்பாமல் பேப்பர் பான் கார்டு பெற விரும்பும் மக்களுக்கும் ஃபினோ வங்கி அதற்கான சேவையை வழங்குகிறது மற்றும் ஆதாரில் உள்ள உங்கள் முகவரிக்கு 4 முதல் 5 நாட்களில் பான் கார்டு டெலிவரி செய்யப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ