சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜூன் 8 வரை ஹை அலர்ட் காலம்

Sun Nakshatra Transit: சூரியனின் ராசி மாற்றம் போல, நட்சத்திர மாற்றத்தின் தாக்கமும் 12 ராசிக்காரர்களுக்கும் இருக்கும். குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் கெட்ட பலன்களை அளிக்கும் என கூறப்படுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 27, 2022, 02:59 PM IST
  • சூரியன் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார்.
  • சூரியனின் ராசி மாற்றத்தின் தாக்கம் மீன ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்காது.
  • சூரியனின் ராசி மாற்றத்தின் பலன் மேஷ ராசிக்காரர்களுக்கு சுபமாக இல்லை.
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜூன் 8 வரை ஹை அலர்ட் காலம் title=

சூரிய நட்சத்திரப் பெயர்ச்சி 2022: ஜோதிடத்தில் சூரியன் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரியனின் நிலையில் ஒரு சிறிய மாற்றம் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

சூரியன் சமீபத்தில் மே 25 அன்று ராசியை மாற்றியுள்ளார். சூரியன் ரோகிணி நக்ஷத்திரத்தில் பிரவேசித்துள்ளார். ஜூன் 8 வரை சூரியன் ரோகிணி நட்சத்திரத்தில் இருப்பார். முன்னதாக சூரியன் கிருத்திகை நட்சத்திரத்தில் இருந்தார். சூரியனின் ராசி மாற்றம் போல, நட்சத்திர மாற்றத்தின் தாக்கமும் 12 ராசிக்காரர்களுக்கும் இருக்கும். குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் கெட்ட பலன்களை அளிக்கும் என கூறப்படுகிறது.

ஜூன் 8, 2022 வரை எதிரிகளிடம் ஜாக்கிரதை

மேஷம்: 

சூரியனின் ராசி மாற்றத்தின் பலன் மேஷ ராசிக்காரர்களுக்கு சுபமாக இல்லை. இந்த நேரத்தில் மேஷ ராசிக்காரர்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகள் அவர்களுக்கு தீங்கு செய்யலாம். நிதி இழப்பு ஏற்படலாம். உறவுகளில் பிரச்சனைகள் வரலாம். வாழ்க்கை துணையுடன் சண்டை வரலாம். இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மிக முக்கியமாகும். 

மகரம்: 

மகர ராசிக்காரர்கள் சூரியனின் ராசி மாற்றத்தால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த ராசிக்காரர்கள் தொழிலதிபர்களாக இருந்தாலும் அல்லது பணியில் இருப்பவர்களாக இருந்தாலும், இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் திட்டங்களை புத்திசாலித்தனமாக செயல்படுத்துங்கள். 

மேலும் படிக்க | மேஷத்தில் சுக்கிரன், இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் 

நீங்கள் எடுக்கும் தீர்மானங்களை பற்றிய விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இந்த காலத்தில் மிகவும் குறைவாகப் பேசவும், அதிகமாக வேலை செய்யவும். கோபமாக பேசுவதை முற்றிலும் தவிர்க்கவும்.

மீனம்: 

சூரியனின் ராசி மாற்றத்தின் தாக்கம் மீன ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்காது. அவர்கள் பண பரிவர்த்தனையை கவனமாக செய்ய வேண்டும். குறிப்பாக வியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இல்லையெனில் பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், வேலை தேடுபவர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க மாட்டார்கள். ஆனால் முதலீடு செய்வதில் கவனமாக இருங்கள். 

இது தவிர, எதிரிகள் உங்கள் மீது ஒரு கண் வைத்திருக்கிறார்கள். அவர்களது கவனம் உங்கள் மீது இந்த காலத்தில் இன்னும் அதிகரிக்கும். ஆகையால், உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனமாக இருக்கவும். 

வானிலையும் பாதிக்கும்

ரோகிணி நட்சத்திரத்தில் சூரியன் தங்கியிருக்கும் காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். மேலும் தூசி நிறைந்த காற்று வீசும். வானிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும், அதிக மாற்றமும் இருக்கும். அதே சமயம் ஜூன் 9ம் தேதி சூரியன் மிருகசீச நட்சத்திரத்தில் நுழைந்த பிறகு மழை பெய்யக்கூடும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கேதுவின் கருணையால் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிது மாறும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News