Christmas Eve 2020: வீட்டிலேயே கிறிஸ்துமஸ் கேக் செய்யலாம் எப்படி தெரிந்துக் கொள்ளுங்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு (Christmas Festivall) பல்வேறு வகையான இனிப்புகள் செய்தாலும், கேக் என்பது கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று. 

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 24, 2020, 11:02 PM IST
Christmas Eve 2020: வீட்டிலேயே கிறிஸ்துமஸ் கேக் செய்யலாம் எப்படி தெரிந்துக் கொள்ளுங்கள் title=

How to make Christmas Cake: கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று இயேசு பிறந்தநாளை (Birth of Jesus) முன்னிட்டு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கிறிஸ்தவ சமூக மக்களுக்கு முக்கிய திருவிழாவாக இருக்கிறது. நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை (Happy Christmas 2020) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு (Christmas Festivall) பல்வேறு வகையான இனிப்புகள் செய்தாலும், கேக் என்பது கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று. கிறிஸ்துவர்கள் வீட்டில் கட்டாயம் கேக்கை எல்லோர் வீட்டிலும் செய்து விடுவார்கள். நீங்களும் கிறிஸ்துமஸ் கேக் (Christmas Cake) செய்ய விரும்பினால், எவ்வாறு செய்யலாம் என்பதற்கான வழிமுறையைகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

தேவையானப் பொருட்கள்:

மைதா மாவு -300 கிராம்
பேக்கிங் பவுடர் -3 டீஸ்பூன்
சோடா உப்பு -1/2 டீஸ்பூன்
வெண்ணெய் -200 கிராம்
பொடித்த சர்க்கரை -250 கிராம்
முந்திரிப்பருப்பு -50 கிராம்
உலர்ந்த திராட்சை -50 கிராம்
செர்ரி -50 கிராம்
முட்டை -3
பிஸ்தா பருப்பு -50 கிராம்
சுல்தானாஸ் -50 கிராம்
கேக் மசாலா -1 டீஸ்பூன்
கோக்கோ -1 டீஸ்பூன்
பால் -100 மில்லி
வென்னிலா எஸ்சென்ஸ் -சில துளிகள்

ALSO READ |  சாண்டா கிளாஸ் உண்மையானவரா? Google ஆண்டவர் என்ன சொல்கிறார்?

செய்முறை:

* மைதா மாவு பேக்கிங் பவுடர் சோடா உப்பு கேக் மசாலா இவைகளை ஒன்றாக கலந்து மூன்று முறை சலிக்கவும்.

* பொடித்த சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழைக்கவும். முட்டைகளை உடைத்து ஊற்றி நுரைக்க அடிக்கவும்.

* குழைத்த கலவையுடன் அடித்த முட்டை சேர்த்து நன்கு கலக்கவும்.

* மைதா மாவில் ஊற்றி எல்லாம் ஒன்று சேரும்படி கலக்கவும்.

* இவற்றில் கோக்கோ பால் காரமல் சர்க்கரை எஸன்ஸ் சேர்த்து கலக்கவும்.

* கடைசியாக மாவு தூவிய செர்ரி பழங்கள் உலர்ந்த திராட்சை சுல்தானாஸ் முந்திரிப்பருப்பு சேர்த்து பேக்கிங் ட்ரெயில் ஊற்றி ஒவனில் வைத்து பேக் செய்யவும்.

* வெந்ததும்வெளியில் எடுத்து விரும்பியபடி அல்ங்காரம் செய்யலாம்.

ALSO READ |  Happpy Christmas 2020: உங்கள் மனம் கவரும் கிறிஸ்துமஸ் பாடல்கள் பட்டியல்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News