கூந்தல் பிரச்சனைகளுக்கு கை கொடுக்கும் இயற்கை வைத்தியம்: முடி உதிர்தல், பொடுகு, அடர்த்தி குறைதல், வறண்ட கூந்தல் உள்ளிட்ட கூந்தல் சம்பந்தமான பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற வீட்டு வைத்தியம் அல்லது இயற்கை வைத்தியம் சிறப்பாக கை கொடுக்கும். முடி தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, பிரபல கூந்தல் பராமரிப்பு நிபுணர் ஜாவேத் ஹபீப் (Hair care tips by Hair expert Javed Habib) உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில விஷயங்களை அறிவுறுத்தினார்.
பொடுகுத் தொல்லை அல்லது வறண்ட முடி அல்லது வறண்ட கூந்தல் ஆகிய பிரச்சனைகளில் இருந்து விடுபட சில இயற்கை வைத்தியம் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். கூந்தல் பராமரிப்பு நிபுணர் கொடுத்துள்ள டிப்ஸ்களை முயற்சி செய்வதன் மூலம், உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு (Hair Care Tips), உங்கள் தலைமுடி தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
தேங்காய் எண்ணெய் மற்றும் இஞ்சி தூள் ஹேர் மாஸ்க்
ஆரோக்கியமான கூந்தலை பெற இஞ்சி ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு ஸ்பூன் சுக்குப் பொடியை எடுத்துக் கொண்டு அதில் 2-3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இந்த கலவையை முடியில் தடவி10-15 நிமிடங்கள் ஊற விடவும். அதன் பிறகு, தலைமுடியை தண்ணீரில் கழுவவும். இது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இஞ்சி - தேங்காய் எண்ணெய் கலவையை கூந்தலில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் ( Coconut oil - Dry Ginger Powder Hair Mask)
முடி வளர்ச்சி அதிகரிக்கும் (Hair Growth)
இஞ்சியில் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம், முடி வளர்ச்சியும் அதிகரிக்கிறது. இதனால் கூந்தலில் பளபளப்பு அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் வளரும்.
மேலும் படிக்க | அடர்த்தியான நீண்ட முடி வேண்டுமா... ஆலுவேராவை ‘இப்படி’ பயன்படுத்துங்க..!!
பொடுகு பிரச்சனையை நீக்கும் (Treats dandruff)
இஞ்சி பேஸ்ட்டைப் பயன்படுத்துவது பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட உதவும். பொடுகு அதிக இருந்தால், முடி வளர்ச்சி பெரிதும் பாதிக்கும்.
தலையில் தொற்று ஏற்படாமல் தடுக்கும் (Prevents Scalp Infection)
இஞ்சியில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, இது உச்சந்தலையில் தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. எனவே இதனை பயன்படுத்துவதால்ல் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்
கூந்தலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் ( Hair Nourishment )
தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் மிகவும் நன்மை பயக்கும். தேங்காய் எண்ணெயில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற கூறுகள் காணப்படுகின்றன. இது கூந்தலுக்கு ஆழமான ஊட்டமளித்து முடி பிரச்சனைகளை அண்ட விடாது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Sun Tan: வெயிலால் கருத்த முகத்தை ... பளபளப்பாக்க சில டிப்ஸ்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ