Good News அளித்தது PNB: வட்டி விகிதங்களை குறைத்து அதிரடி

அரசுக்குச் சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) அதன் பண்டிகை கால சலுகையின் ஒரு பகுதியாக தங்க நகைகள் மற்றும் சவரன் தங்கப் பத்திரங்களுக்கான கடன்களுக்கான வட்டி விகிதத்தை 145 அடிப்படை புள்ளிகள், அதாவது 1.45 சதவிகிதம் குறைத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 14, 2021, 02:32 PM IST
  • பண்டிகை கால சலுகையின் ஒரு பகுதியாக, பிஎன்பி தங்க நகைக் கடன்களின் வட்டி விகிதம் குறைப்பு.
  • கூடுதலாக, பிஎன்பி வீட்டுக் கடன் விகிதத்தையும் குறைத்துள்ளது.
  • வங்கி வீட்டுக் கடன்களின் விளிம்பையும் குறைத்துள்ளது.
Good News அளித்தது PNB: வட்டி விகிதங்களை குறைத்து அதிரடி title=

Punjab National Bank: அரசுக்குச் சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) அதன் பண்டிகை கால சலுகையின் ஒரு பகுதியாக தங்க நகைகள் மற்றும் சவரன் தங்கப் பத்திரங்களுக்கான கடன்களுக்கான வட்டி விகிதத்தை 145 அடிப்படை புள்ளிகள், அதாவது 1.45 சதவிகிதம் குறைத்துள்ளது.

பிஎன்பி இப்போது சவரன் கோல்ட் பாண்டிற்கு (Sovereign Gold Bond - SGB) கடன்களை 7.20 சதவீதத்திலும், தங்க நகைகளுக்கான கடன்களை (Gold Loan) 7.30 சதவிகிதத்திலும் வழங்குகிறது என்று வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கூடுதலாக, பிஎன்பி இப்போது வீட்டுக் கடன் (Home Loan) விகிதத்தையும் குறைத்துள்ளது. இப்போது இந்த கடன் 6.60 சதவிகிதத்திலிருந்து தொடங்கும். வாடிக்கையாளர்களுக்கான கார் கடன்கள் 7.15 சதவிகிதத்திலிருந்து துவங்குகிறது. வாடிக்கையாளர்கள் தனிநபர் கடன்களை 8.95 சதவிகிதத்திலிருந்து பெறலாம்.

ALSO READ: கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வர்த்தகத்தை மேம்படுத்த PNB வழங்கும் அற்புத வாய்ப்பு..!!

பண்டிகை காலங்களில், தங்க நகைகள் மற்றும் SGB கடன்களுக்கான சேவைக் கட்டணங்கள்/செயலாக்கக் கட்டணங்கள் ஆகியவற்றை PNB முழுமையாக தள்ளுபடி செய்கிறது. சமீபத்தில் வங்கி வீட்டுக் கடன்கள் மற்றும் வாகனக் கடன்களிலும் இந்த சலுகையை அறிவித்தது.

வங்கி வீட்டுக் கடன்களின் விளிம்பையும் குறைத்துள்ளது. கடன் பெறுவோர் இப்போது சொத்தின் மதிப்பில் 80 சதவிகிதம் வரை கடன் தொகையின் மேல் உச்சவரம்பு இல்லாமல் பெறலாம்.

ALSO READ: PPF கணக்கை பஞ்சாப் நேஷனல் வங்கியில் திறந்தால் பல நன்மைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News