ஆஹா! இதெல்லவா கம்பேனி - 9 நாள்கள் லீவு... அதுவும் சம்பளத்துடன்!

9 Days Paid Leave: ஒன்று, இரண்டு நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை எடுப்பதே கடினமாக இருக்கிறதா?. இங்கு ஒரு நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு ஒன்பது நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை வழங்குகிறது. அதுகுறித்து இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 7, 2023, 12:56 PM IST
  • HackerRank என்ற அமெரிக்கா மென்பொருள் மேம்பாட்டு இதை அறிவித்துள்ளது.
  • நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
  • அதனை பகிர்ந்த ஊழியர் ஒருவர், இத்திட்டம் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
ஆஹா! இதெல்லவா கம்பேனி - 9 நாள்கள் லீவு... அதுவும் சம்பளத்துடன்! title=

9 Days Paid Leave: அமெரிக்காவை தளமாகக் கொண்ட மென்பொருள் மேம்பாட்டு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு "ஓய்வு மற்றும் புத்துணர்வு" மேற்கொள்ள 9 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்குகிறது, இது நெட்டிசன்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

சமூக வலைதள பயனர் ஷைலேந்திர பாண்டே அந்நிறுவனம் அனுப்பிய உள் மின்னஞ்சலின் ஸ்கிரீன்ஷாட் தனது LinkedIn இடுகையில் பகிர்ந்துள்ளார். ஜூலை முதல் வாரத்தில், அதாவது ஜூலை 1 முதல் ஜூலை 9 வரை, கலிஃபோர்னிய நிறுவனமான HackerRank தனது ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்குவதற்கான தனது நிறுவனத்தின் முடிவை அறிவிப்பதை ஸ்கிரீன்ஷாட் காட்டுகிறது.

மேலும் படிக்க | இனி இந்த இடங்களில் ட்ராலி பேக் பயன்படுத்தினால் அபராதம்!

"சமீப காலங்களின் பரபரப்பான சூழலில், வேலை வாழ்க்கை சமநிலை, பணியாளர் விடுப்பு அல்லது விடுமுறைக்கு செல்வதற்கான காரணங்களை உருவாக்குவது பற்றி நாம் அனைவரும் அதிகம் பார்த்து வருகிறோம். HackerRank நிறுவனத்தின் இந்த விஷயம் மிகவும் சிறந்தது மற்றும் அனைத்து ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முன்னெடுப்பு பாராட்டப்பட வேண்டும். இது போன்ற தைரியமான முடிவை எடுத்த நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள்" என்று பாண்டே தனது LinkedIn பதிவில் எழுதினார். ஊழியர்கள் ஓய்வெடுத்து, அடுத்த வேலையை தொடங்குவதற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இந்த விடுமுறை அமையும் என நிறுவனம் கருதுகிறது. 

பெரிய எண்ணிக்கையில் பணியாளர்களை திடீரென பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட சில சூழல்களால் வேலையிடங்களில் இதுபோன்ற முன்னெடுப்புகள் பெரிய விஷயமாகிவிட்டது.  பல பணிநீக்கங்கள் மற்றும் பல்வேறு சந்தை உறுதியற்ற காரணிகள் முதலாளிகள் - நிறுவனங்கள் - ஊழியர்களுக்கான விஷயங்களை மிகவும் கடினமாக்கியுள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட LinkedIn ஆராய்ச்சியில் 78 சதவீத தொழிலாளர்கள் புதிய வேலையைத் தேடும் அளவுக்கு நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறியது. புதிய பணிகள் மற்றும் இடங்களுக்குப் பொருந்துவதற்காக, 44% மக்கள் புதிய, மாற்றத்தக்க திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள்.

இந்த இளவயது ஊழியர்கள் தங்கள் லட்சியங்களை மறைக்காமல், ஆர்வமற்ற மற்றும் திருப்தியற்ற தொழில்களில் இருந்து மாறுவதை எதிர்நோக்குகின்றனர். இந்த வாலிபர்களுக்கு இனி சந்தை பற்றிய பயம் இல்லை. தற்போதைய பொருளாதார வளர்ச்சியால் அவர்கள் எந்த வகையிலும் அச்சுறுத்தப்படவில்லை. கொரோனா தொற்று மற்றும் ஒழுங்கற்ற வேலைச் சூழலை அடுத்து அவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். மேம்பாடு மற்றும் மறுபயிற்சியின் நன்மைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்கள் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

மேலும் படிக்க | இந்தோனேஷியாவுக்கு செல்ல IRCTC-இன் மாஸ் பிளான்! அதுவும் குறைந்த விலையில்...
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News