வெளியானது 'கோல்ட்' திரைப்படத்தின் டீசர்!! See Inside!

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் 'கோல்ட்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

Last Updated : Jun 25, 2018, 04:14 PM IST
வெளியானது 'கோல்ட்' திரைப்படத்தின் டீசர்!! See Inside! title=

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் 'கோல்ட்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஆமீர்கான் நடித்த `தலாஷ்' படத்தை இயக்கிய ரீமா காக்டிதான் இயக்கத்தில் அக்ஷய் குமார் தற்போது நடித்திருக்கும் படம் 'கோல்ட்.  ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தில் அக்ஷய் குமார், நாகினி சீரியல் புகழ் மவுனி ராய் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

1948 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றதை பின்னணியாக வைத்து இப்படம் திரைப்படமாகி வருகிறது. நடிகரும் இயக்குனருமான ஃபர்ஹான் அக்தர், ரிதேஷ் சித்வானியுடன் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார். சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ளது இப்படம்.

இந்நிலையில் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் கோல்ட் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. 

Trending News