ராஜஸ்தான் மாநில ஜெய்சல்மீரில் பாகிஸ்தான் எல்லை பகுதிக்கு அருகே உள்ள கிரமா மக்கள் ஒரு வினோதமான பிரச்சனையை சந்தித்து வருகின்றன.
ராஜஸ்தானின்(Rajasthan) ஜெய்சல்மீர் ஒரு பாலைவனப்பகுதி. அங்கே மணல் திட்டுகள் நிறைந்துள்ளன. மிக வேகமாக காற்று வீசும் போது இந்த மணல் திட்டுகள் நகர்ந்து இடம்பெயரும் தன்மை கொண்டவை.
ராஜஸ்தானின் எல்லைப் பகுதிகளில் பணியில் உள்ள எல்லை காவல் படைக்கு (BSF )சிக்கலை ஏற்படுத்தும் மணல் திட்டுகள், கிராம மக்களுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றன.
பாலைவன (Desert) பகுதியில் வெறும் மணல் திட்டுகள் நிரம்பியுள்ளதாலும் வேறு எந்த வகையான அடையாளமும் இல்லாததாலும், எல்லையை அடையாளம் காணமுடிவது வேலியினால் மட்டுமே. புழுதி காற்று அல்லது புழுதி புயல் வீசும் போது மணல் திட்டுகள் நகர்ந்து சென்று, எல்லையில் போடப்பட்டுள்ள வேலியை முழுவதும் மூடிவிடுகின்றன.
வேலி முழுவதுமாக மணலில் மூடப்பட்டிருக்கும் நிலையில் எல்லையை கடப்பது எளிது. இதன் காரணமாக விநோதமான சம்பவம் இங்கே நடந்துள்ளது. ஜெய்சால்மீரின் எல்லையில் உள்ள கரடா, போச்சினா உள்ளிட்ட சுமார் 12 கிராமங்களின் ஆடுகள் எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்கு சென்று விட்டன என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த சில நாட்களில், ஜெய்சல்மீரில் உள்ள பாகிஸ்தான் எல்லை பகுதியை ஒட்டிய கிராமங்களில் இருந்து சுமார் 200 ஆடுகள் பாகிஸ்தானுக்கு எல்லை தாண்டியுள்ளன. இது கால்நடை வளர்ப்பவர்களுக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
எல்லை கிராமத்தை சேர்ந்த லால்சிங் என்பவரது 80 ஆடுகள், சதுர்சிங்கின் என்பவரது 40, ஹுகாம்சிங்கின் என்பவரது 20 ஆடுகள், போம் சிங்கின் என்பவரது 10ஆடுகள் மற்றும் சுஜன் சிங்கின் 40 ஆடுகள், வேலியை மணம் திட்டுகள் மூடி விட்டதால், எல்லை தாண்டி பாகிஸ்தானுக்கு சென்று விட்டன.
ALSO READ | சாப்பிட வழியில்ல, செல்லப்பிராணிய தாங்க; குலை நடுங்க வைக்கும் கொரிய அதிபர் உத்தரவு
இந்த எல்லை கிராமங்களில் கால்நடை வளர்ப்பு மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஆடுகள் எல்லையைத் தாண்டி சென்று விட்டதால், அவர்கள், குடும்பத்தை நடத்த முடியாமல், அரசிடம் இழப்பீடு கோரி வருகின்றனர்.
எல்லை பாதுகாப்பு படையினர் (BSF) வேலியை பாதுகாப்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள், ஆனால் வேகமான காற்று அல்லது புழுதி புயல் வீசும் போது மணல் திட்டுகள் வேலிகளை மூடி விடுவதால் சிக்கல் அதிகரிக்கின்றன.
ALSO READ | குளிரில் உறையப்போகும் லடாக்.. இனியாவது எல்லையில் தொல்லைகள் தீருமா..!!