நாக்பூர் சிறையில் அடைக்கபபட்டுள்ள பிரபல மும்பை தாதாவும் அரசியல்வாதியுமான அருண் காவ்லி, காந்திய சிந்தனை தேர்வில் 92.5% மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய தாதா அருண் காவ்லி, சிவசேனா கட்சி பிரமுகரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைதிகளை திருத்துவதற்காக, நாக்பூரில் உள்ள சையோக் டிரஸ்ட் மற்றும் சர்வோதய ஆஸ்ரமம் சார்பில் ஒவ்வொரு வருடமும் தேர்வு ஒன்று நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் இந்த தேர்வானது நடத்தப்பட்டது. இந்த வருடம் நடத்தப்பட்ட இந்த தேர்வில் பிரபல மும்பை தாதா அருண் காவ்லியும் எழுதினார். தேர்வு எழுதிய அருண் காவ்லி மொத்தம் 80மதிப்பெண்களுக்கு 74 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த தேர்வு காந்திய சிந்தனை குறித்து நடப்பட்டது என்பது குறிப்பிட்டத்தக்கது.
இது தொடர்பாக சிறை அதிகாரி ராணி போன்சாலே கூறுகையில், இந்த தேர்விற்கு தேவையான புத்தகங்கள் ஒரு மாதத்திற்கு முன்னரே, கைதிகளிடம் வழங்கப்பட்டது. காந்தியின் சிந்தனைகள் மற்றும் அவரது வாழ்க்கை குறித்து கைதிகள் தெரிந்து கொள்ள இந்த தேர்வானது நடத்தப்படுகிறது என்றார்.