Eyeglass vs Contact Lens: பார்வை கோளாறு காரணமாக மூக்கு கண்ணாடி அணியும் பழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் காண்டாக்ட் லென்ஸ்களின் பயன்பாடும் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அனைவருக்கும் ஏற்ற விலையில் மூக்கு கண்ணாடியும், சற்று கூடுதல் விலையில் காண்டாக்ட் லென்ஸ் இருந்தாலும் அவரவர் சௌகரியத்திற்கு ஏற்ப இதனை பயன்படுத்துவார்கள். மேலும் அவர்களின் பணி சார்ந்த சூழலும் இவற்றை தீர்மானிக்கும்.
இருப்பினும் சிலருக்கு கண்களுக்கு மூக்கு கண்ணாடி அணியலாமா அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணியாலாமா என்ற குழப்பம் இருக்கும். அந்த வகையில், புது டெல்லியை சேர்ந்த கண் மருத்துவரான பிரியங்கா சிங் என்பவர் ஊடகம் ஒன்றில் மூக்கு கண்ணாடி மற்றும் காண்டாக்ட் லென்ஸ் ஆகிய இரண்டின் நல்லது மற்றும் கெட்டது இரண்டையும் விளக்கினார். இதன்மூலம், அவரின் கருத்துகளை கேட்டு அவற்றில் உங்களுக்கு எது சரியெனப் படுகிறதோ அதனை அணிந்துகொள்ளலாம்.
மூக்கு கண்ணாடி: நன்மை, தீமை
முதலில் மூக்கு கண்ணாடியை பற்றி பார்ப்போம். இதுதான் நம்மில் பலரும் பின்பற்றும் ஒன்றாகும். இது அணிவதற்கு எளிமையானது. ஒப்பீட்டளவில் விலையும் குறைவானது. கண்ணாடியை பராமரிப்பதும், சுத்தம் செய்வதும் லென்ஸை ஒப்பிடும்போது எளிமையானதுதான். தினந்தோறும் கண்ணாடியை சரிபார்த்துக்கொண்டிருக்க தேவையில்லை. தூங்கும்போது மட்டும் கழட்டிவைத்துக்கொண்டு, எழுந்த உடன் அணிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | இந்த 5 விஷயங்களை செய்தால் உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்..!
மேலும், தூசி, துரும்புகளில் இருந்து கண்ணாடி உங்களை பாதுகாக்கும். இதன் கண் தொற்றும் கூட தடுக்கப்படும். வரண்ட சூழலிலும் கூட கண்ணாடி அணிந்துகொள்வதற்கு ஏதுவான ஒன்றாக இருக்கும். விருப்பப்படுவோர் கண்ணாடியின் லென்ஸில் புறஊதா கதிர்கள் தாக்காதவாறு பில்டர்களும் போட்டுக்கொள்ளலாம். கணினி முன் அதிகம் வேலைப்பார்த்தாலும், அதில் இருந்து பாதுகாப்பு அளிக்க அதற்கென தனி பில்டர் இருக்கிறது.
மூக்கு கண்ணாடிகள் பெரிதாக இருக்கும். இது முகத்தை சற்று பொலிவிழக்க செய்யலாம். உங்கலின் கண்களுக்கு கீழ் கண்ணாடி அணியும் அச்சு பதியவும் வாய்ப்பிருக்கிறது. மழை காலங்களில், விளையாடும் நேரங்களில், ஆபத்து காலகட்டங்களில் கண்ணாடி அணிந்து செல்வது சற்று கடினமாகும். இருந்தாலும் சிலருக்கு கண்ணாடியே சௌகரியமாக இருக்கிறது. இவை அனைத்தும் மருத்துவர் கூறிய கருத்துகளின் சுருக்கமாகும்.
காண்டாக்ட் லென்ஸ்: நன்மை, தீமை
அதேபோல், காண்டாக்ட் லென்ஸ் குறித்து இப்போது பார்ப்போம். இதிலும் பல நன்மைகள் உள்ளன. ஓட்டப்பந்தய வீரர், வீராங்கனைகள் கூட இந்த காண்டாக்ட் லென்ஸ்களை அணிந்துகொள்ளும் வாய்ப்பிருக்கிறது. மேலும், இது உங்களின் முகத்தை பொலிவிழக்க செய்யாது. நீங்கள் அதை முறையாக அணிந்துகொண்டு, சுத்தமானதாக பராமரித்தால் மூக்கு கண்ணாடியை விட காண்டாக்ட் லென்ஸ் நல்ல ஆப்ஷன்.
இருந்தாலும், காண்டாக்ட் லென்ஸில் அதீத கவனம் தேவை. சிறு அலட்சியம் கூட கண் தொற்றை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். கண்களுக்கு ஆக்ஸிஜன் செல்வதை இது சற்று தடுக்கும். அதுபோலவே, கண்களை உலர்வாக வைத்திருக்கும். மேலும் அதனை நீங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே அணிந்திருக்க முடியும். 6-8 மணிநேரம் வரை மட்டும் அணிந்துகொள்ள முடியும்.
உங்கள் சாய்ஸ்
இதன்மூலம், உங்களின் சௌகரியத்தை பொறுத்தும், தேவையை பொறுத்தும், பட்ஜெட்டை பொறுத்தும் மூக்கு கண்ணாடி அணிந்துகொள்வதா அல்லது காண்டாக்ட் லென்ஸை அணிந்துகொள்வதா என முடிவெடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், நிச்சயம் மருத்துவ ஆலோசனை பெற்ற பின்னரே, இவற்றை முறையாக அணிந்துகொள்ள வேண்டும் என்பது இங்கு குறிப்பிடப்படுகிறது.
மேலும் படிக்க | சோம்பேறித் தனமாக இல்லாமல் எப்போது சுறுசுறுப்பாக இருப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ