ஆகாயத்தில் இருந்து கொட்டும் ஆங்கில எழுத்துகள் - வைரல் வீடியோ

வணிகம் வளாகம் ஒன்றில் மின்னொளியில் ஆங்கில எழுத்துகள் அந்தரத்தில் விழும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 02:47 PM IST
ஆகாயத்தில் இருந்து கொட்டும் ஆங்கில எழுத்துகள் - வைரல் வீடியோ title=

தொழில்நுட்ப உலகில், கற்பனையை விஞ்சும் பல விசயங்கள் சாத்தியப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஏதோ ஒரு காலத்தில் இவையெல்லாம் சாத்தியமா? எண்ணிய விஷயங்கள் நம் கண் முன்னே சாத்தியமாகி இருப்பதை பார்த்துக் கொண்டு இருக்கும் தலைமுறையாக இருக்கிறோம். மருத்துவம் முதல் பொழுதுபோக்கு வரை என தொழில்நுட்பங்களின் மாயாஜாலங்கள் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே செல்கின்றன.

மேலும் படிக்க | அந்த மனசு தான் கடவுள்! தெரு நாய்க்கு உணவளித்த முதியவர்!

குறிப்பாக, லேசர் லைட்டுகள் மூலம் செய்யப்படும் மாயாஜாலங்கள் பொழுதுபோக்கின் உச்சமாக இருக்கும். அந்தவகையில் லேசர் லைட் மூலம் மேற்கொள்ளப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. அந்த வீடியோவில் மேலிருந்து கீழா தண்ணீர் ஊற்றுவது போல் ஆங்கில எழுத்துகளும், மனித உருங்களும் விழுவது ஒளி கலவை செய்யப்பட்டுள்ளது. வண்ணமயமான ஆங்கில எழுத்துகளும், மனித உருவங்கும் நொடியில் கீழே விழுந்து மறைவதுடன், மீண்டும் புதியதாக மேலிருந்து கீழாக விழுவது காண்போரை வியக்க வைக்கிறது.

அருகில் இருந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் ஆங்கில எழுத்துகள் லேசர் லைட் மூலம் அந்தரத்தில் விழ வைக்கப்படுகிறதென்று.  தொலைவில் இருந்து பார்க்கும்போது மாயாஜாலம் என பலர் நினைக்கக்கூடும். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மேலும் படிக்க | எனக்கும் பசிக்கும்ல! பலரையும் ரசிக்க வைத்த மழலையின் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News