HPSSB Recruitment 2022: மாநில அரசு வேலைவாய்ப்பு: 1500 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

கால்நடை பராமரிப்பு கால்நடை மருந்தாளர், ஜூனியர் அலுவலக உதவியாளர் உட்பட 1500 மாநில அரசு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 27, 2022, 04:17 PM IST
  • கால்நடை பராமரிப்பு கால்நடை மருந்தாளர் வேலைக்கு விண்ணப்பிக்கவும்
  • இமாச்சல மாநில அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • 1500 காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
HPSSB Recruitment 2022: மாநில அரசு வேலைவாய்ப்பு: 1500 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு title=

HPSSB Recruitment 2022: ஹிமாச்சல பிரதேச பணியாளர் தேர்வு ஆணையம் (HPSSB) கால்நடை பராமரிப்பு கால்நடை மருந்தாளர், ஜூனியர் அலுவலக உதவியாளர் மற்றும் பிற பதவிகளுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. 

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை பயன்படுத்தி அரசுப் பணியைப் பெறலாம்.

இந்த காலியிடங்களுக்கு மே 31 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் ஜூன் 30  ஆகும்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் hpsssb.hp.gov.in இல், இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வசதிக்காக, இந்த பணிக்கான விண்ணப்ப நடைமுறைகளை படிப்படியாக குறிப்பிட்டுள்ளோம்.

தகுதியுடையவர்கள், HPSSB இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

மேலும் படிக்க | பட்டதாரி பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்

உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள “Sign up” (பதிவுசெய்க) என்ற தெரிவைப் பயன்படுத்தி ORA இல் பதிவு செய்துகொள்ள வேண்டும்

அதன்பிறகு விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்
தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்
விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்
எதிர்கால குறிப்புக்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் நகலை வைத்திருங்கள்.

மேலும் படிக்க | Job Alert: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு TANGEDCO வழங்கும் வேலைவாய்ப்பு

சில முக்கிய விவரங்கள் இங்கே:
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் ஜனவரி 1, 2022 அன்று 18 வயதுக்கு குறையாமலும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பட்டியல் சாதி, பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகள்/ பேரக்குழந்தைகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பில் ஐந்து ஆண்டுகள் தளர்வு உண்டு.

மேலும் படிக்க | தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வழங்கும் வேலைவாய்ப்பு

விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவு/E.W.S விண்ணப்பதாரர்களுக்கு 360 ரூபாய்
பொது ஐஆர்டிபி, உடல் ஊனமுற்றோர், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வார்டு, ஹெச்பியின் முன்னாள் ராணுவ வீரர்களின் வார்டு ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் 120 ரூபாய். 
மேலதிக விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு தொடர்பான விரிவான அறிவிப்பை கவனமாக படித்து தெரிந்துக் கொள்ளவும்.  
விண்ணப்பிப்பது தொடர்பான உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால், வார வேலை நாட்களில் HPSSC வரவேற்பு கவுன்டரை நேரில் அணுகலாம்.
இலவச தொலைபேசி எண்கள்: 01972- 222204,222211, 1800-180-8095 என்ற எண்ணில் 
sssb-hp@nic.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். 
ஆன்லைன் ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் (ORA), வேட்புமனு போன்றவற்றைப் பற்றிய ஏதேனும் வழிகாட்டுதல்/தகவல்/தெளிவுபடுத்துதல் தேவைபட்டால் அணுகுவதற்கு தயக்கம் தேவையில்லை. 

மேலும் படிக்க | இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் தயார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQ

Trending News