சரும பராமரிப்பு: சருமத்தில் முடிகள் இருப்பது மிகவும் பொதுவானது. அதோடு சிறிய அளவிலான முடியை அகற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால், முகத்தில், குறிப்பாக, கன்னம் மற்றும் உதடுகளின் மேல் தோன்றும் தேவையற்ற முடிகளை நீக்குவதால் முகம் பளிச்சென்று இருக்கும். பலர் பார்லர் சென்று முடிகளை நீக்குவார்கள். எனினும், சில வீட்டு வைத்தியம் மூலம், முகத்தில் இருந்து முடியை அகற்றலாம். வலியின்றி, செலவின்றி, முடிகளை நீக்கி உங்கள் சருமத்தில் பளபளப்பைக் காணலாம்.
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க சில டிப்ஸ்
முட்டை மற்றும் சோள மாவு
முகத்தில் உள்ள முடிகளை நீக்க, ஒரு பாத்திரத்தில் முட்டையின் (Egg) வெள்ளைக் கருவை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் சோள மாவு சேர்த்து பேஸ்ட் தயாரித்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி முழுமையாக உலர விடவும். முடியை அகற்ற வேண்டிய பகுதியில் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். அது காய்ந்ததும், இந்த முகமூடியை முடி வளரும் திசைக்கு எதிர் திசையில் இருந்து பீல் ஆஃப் மாஸ்க் போல அகற்றவும். இதில் நீங்கள் மிக லேசான வலி அல்லது முடி இழுப்பதை போல உணரலாம்.
பப்பாளி மற்றும் மஞ்சள்
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க பப்பாளி உதவும். பப்பாளியில் பாப்பைன் என்ற நொதி உள்ளது. முக மாஸ்க் தயாரிக்க சில பப்பாளி துண்டுகளை எடுத்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதில் அரை ஸ்பூன் மஞ்சளை கலந்து, கெட்டியான பேஸ்ட்டகா தயாரித்து முகத்தில் தடவி விடவும். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். ஒரு வாரத்திற்கு இந்த டிப்ஸை கடைபிடித்த பிறகு உங்கள் பலன் தெரியும்.
மேலும் படிக்க | கல்லீரல் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகள் இவைதான்.. உஷார் மக்களே!!
தேன் மற்றும் சர்க்கரை
தேன் மற்றும் சர்க்க்ரை கலந்து இயற்கையான மாஸ்கை வீட்டிலேய தயாரிக்கலாம். ஆனால், அதை தயாரித்து, பூசும் போது கவனமாக இருப்பது மிகவும் அவசியம். ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து அடுப்பில் வைத்து கரைக்கவும். கலவையை அடுப்பில் இருந்து எடுத்து, ஊதி, மேல் உதடுகளில் தடவி, அதன் மீது பருத்தி துணி அல்லது மெழுகு பட்டையை வைத்து இழுக்கவும். இதற்கு அழுத்தம் தேவைப்படும். மேலும், நீங்கள் தயாரித்த கலவை அதிக சூடாக இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட தடவுவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
சர்க்கரை மற்றும் எலுமிச்சை
முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நீக்க, சர்க்கரை எலிமிச்சை கலந்த மாஸ்க் மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியமாக இருக்கும். ஒரு கிண்ணத்தில் சம அளவு சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, லேசான தண்ணீர் சேர்த்து, கலவையை ஒரு ஸ்பூன் கொண்டு நன்றாக கலக்கவும். இந்தக் கலவை கெட்டியானதும், சருமத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
பால் மற்றும் தவிடு
கோதுமை தவிடு மற்றும் பால் இந்த செய்முறை, படிப்படியாக முகத்தில் உள்ள முடிகளை நீக்கும். எனவே தேவையற்ற முடிகளை அகற்ற நீங்கள் அவசரம் காட்டவில்லை என்றால், அதைப் பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் தவிடு மற்றும் பாலைக் கலந்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவவும். இதை வாரத்திற்கு 3 முதல் 6 முறை பயன்படுத்தலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Diabetes Control: சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் சில ‘மேஜிக்’ மசாலாக்கள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ