இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடுங்கள்!

பலரும் இரவில் தூக்கம் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.  இரவில் நன்றாக தூங்கவில்லை என்றால் அடுத்த நாள் முழுவதும் சோம்பேறியாக இருக்கும்.  

Written by - RK Spark | Last Updated : Nov 15, 2023, 12:43 PM IST
  • இரவு தூக்கம் மிகவும் அவசியம்.
  • 7 - 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும்.
  • நல்ல தூக்கம் இல்லை என்றால் இதய பாதிப்பும் வரும்.
இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடுங்கள்! title=

வேலையை நினைத்து கவலைகள், பிற மன அழுத்தங்கள் அல்லது அடுத்த நாள் வேலையை நினைத்து அல்லது காரணமே இல்லாமல் நம்மில் பெரும்பாலோர் தூக்கம் இல்லாமல் சிரமப்படுகிறோம்.  ஆனால் சில எளிய உணவு மாற்றங்கள் செய்வதன் மூலம் இரவில் நல்ல ஆரோக்கியமான தூக்கத்தை பெற முடியும். நீங்கள் நன்றாக தூங்குவதற்கு உதவும் சில உணவுகள் மற்றும் பானங்கள் உள்ளன, அவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

மீன்கள்

இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதுடன், சிறந்த ஓய்வைப் பெறுவதற்கு கடல் உணவு நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2019 ஆம் ஆண்டு நடந்த ஆய்வில், கடல் உணவுகள் இரவில் நல்ல தூக்கத்தை தருவதாக கண்டுபிடித்துள்ளனர்.  இரவில் பால் குடிக்க விரும்பாதவர்களுக்கு மத்தி மீன் சிறந்த சத்தான உணவாக கருதப்படுகிறது. மத்திகள் ஒரு அற்புதமான கால்சியம் மூலமாகும். அதிக நண்டு சாப்பிடுவதும் இரவில் நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்க | ஈஸியா உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க

அரிசி

பொதுவாகவே இரவில் அரிசி சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். இதையே தான் ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர்.  இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் டிரிப்டோபானை எளிதாக்குகிறது, இது உடலில் செரோடோனின் மற்றும் மெலடோனின் உருவாக்கும் அமினோ அமிலம் மூளைக்குள் செல்ல உதவுகிறது.  

வாழைப்பழங்கள்

ஒரு வாழைப்பழத்தில் சுமார் 375mg பொட்டாசியம் நிரம்பியுள்ளது. இது இரவில் நல்ல தூக்கத்தை வரவைக்கிறது.  படுக்கைக்கு முன் வாழப்பழத்தை சாப்பிடுவது வைட்டமின் பி6ன் அளவை அதிகரிக்கும். மேலும் படுக்கைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் இரண்டு கிவி பழங்களை சாப்பிட்டால், 42% விரைவாக தூக்கம் பெற்று, 13% அதிக நேரம் தூங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த பழங்களில் பி வைட்டமின், செரோடோனின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இவை நல்ல தூக்கத்தை அளிக்கின்றன.

சோயா உணவுகள்

சோயா பொருட்கள் அதிகமாக உட்கொள்வது, நல்ல தூக்கம் பெறுவதற்கான உதவுகிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தூக்கத்தின் தரத்தில் நன்மை பயக்கும். மேலும் பட்டர் பீன்ஸ் சாப்பிட்டால் நல்ல தூக்கத்தின் தரம் 6.6 மடங்கு அதிகமாக உள்ளது. பட்டர் பீன்ஸில் பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 உள்ளன, இவை அனைத்தும் நல்ல தூக்கத்திற்கு பங்களிக்கின்றன. 

கெமோமில் டீ

கெமோமில் டீ என்பது ஒரு பழமையான தூக்க நிவாரணியாகும், இது மன அழுத்தத்தை குறைத்து விரைவில் நல்ல தூக்கத்தை பெற உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  மேலும் பால் பொருட்களை உட்கொள்வது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது, ஒவ்வொரு நாளும் கால்சியம் நிறைந்த பால் உட்கொள்வது தூக்கத்தை அதிகரிக்கும்.

கொட்டைகள்

பிரேசில் பருப்புகளில் மெக்னீசியம் நிரம்பியுள்ளது, இது தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலடோனின் ஹார்மோனின் அளவை மேம்படுத்துவதோடு தசை தளர்வுக்கும் உதவுகிறது. இரத்தத்தில் குறைந்த அளவு மெக்னீசியம் தூக்கத்தில் சிரமங்களைத் தூண்டும். அதே போல் பாதாம் மெக்னீசியத்தின் நல்ல ஆதாரமாகவும் உள்ளது மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் குணங்களை கொண்டுள்ளது. 

முழு தானியங்கள்

அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்வது அதிக புத்துணர்ச்சியூட்டும் தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. முழு தானியங்களிலிருந்து பெறப்படும் அதிக நார்ச்சத்து ஆழமான தூக்கத்தை உருவாக்குகிறது மேலும் காலையில் உற்சாகமாக உணர வைக்கிறது. 

மேலும் படிக்க | 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்கள் உடலில் என்ன நடக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News