யுபிஐ பேமெண்ட் முறை வந்ததும் மக்கள் வங்கிக்கு செல்லும் வழிமுறை மிகவும் குறைந்துவிட்டது. அனைத்து நடைமுறைகளையும் ஆன்லைன் வழியாகவே செலுத்திக் கொள்ளும் அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் வந்த பிறகு காய்கறி கடை முதல் கழிப்பறை வரை நொடியில் பணத்தை செலுத்திவிட முடிகிறது. இதனையே மக்களும் அதிகம் விரும்புகின்றனர்.
அந்தளவுக்கு வசதிகள் இருக்கும் கூகுள் பே மூலம் உங்களின் கிரெடிட் கார்டு பில்லையும் செலுத்திவிட முடியும். அது எப்படி என்ற எளிமையான நடைமுறையை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | கிரெடிட் கார்டு மூலம் யுபிஐ பேமெண்ட் செய்யலாம்; வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்
கிரெடிட் கார்ட் பில்லை கூகுள் பே மூலம் செலுத்துதல்;
* உங்கள் கிரெடிட் கார்டை Google Pay உடன் இணைக்கவும்
* பேமெண்ட் கேட்டகிரிக்கு செல்லுங்கள். அங்கு கிரெடிட் கார்டு பில் பேமெண்ட் ஆப்சன் இருக்கும்
* அங்கு உங்கள் 16 இலக்க அட்டை எண்ணை பதிவிடவும்.
* சில சமயங்களில், உங்கள் கிரெடிட் கார்டின் கடைசி 4 இலக்கங்கள் போன்ற வரையறுக்கப்பட்ட தகவலை மட்டுமே உள்ளிட வேண்டும்.
* உங்கள் தகவலை மதிப்பாய்வு செய்து உறுதிப்படுத்தவும்.
* இப்போது உங்கள் கிரெடிட் கார்டு கூகுள் பேவுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
* அதன்பின்னர், உங்கள் யுபிஐ பாஸ்வேர்டை போட்டு கிரெடிட் கார்டு பில்லை செலுத்தலாம்.
கூகுள் மே மூலம் மிகவும் எளிமையாக உங்கள் கிரெடிட் கார்டு பில்லை நீங்கள் செலுத்திவிட முடியும்.
மேலும் படிக்க | பணக்காரர்களை குறிவைத்து கிரெடிட் கார்டில் புதிய மோசடி - உஷார் மக்களே..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ