இன்றைய ராசிபலன், 16 மே 2021: விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்

சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு கலை. இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 16, 2021, 06:22 AM IST
  • மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும்
  • கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும்
  • நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்
இன்றைய ராசிபலன், 16 மே 2021: விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும் title=

புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு கலை. இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.   
இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே... 

16-05-2021

மேஷம்:

சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் மற்றும் உத்தியோக மாற்றம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முற்படுவீர்கள். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.  செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மையான சூழல் உண்டாகும்.

ரிஷபம்:
மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பொருட்களை கையாளுவதில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.  உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழல் ஏற்படும். பேச்சுக்களில் புத்துணர்ச்சி உண்டாகும். பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்:
கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். சபைகளில் ஆதரவாக இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள்.

கடகம்:
புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். பிரபலமானவர்களின் ஆதரவு கிடைக்கும். ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கடன் சார்ந்த சில பிரச்சனைகள் குறையும். பணிபுரியும் இடங்களில் சூழ்நிலையறிந்து செயல்பட வேண்டும்.

Also Read | தமிழ் பஞ்சாங்கம் 16 மே, 2021: இன்றைய நல்ல நேரம், சுப ஹோரைகள்

சிம்மம்:
புதுவிதமான அணுகுமுறைகளை மேற்கொள்வீர்கள். சில தவறுகளின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பல நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். பிரிந்து சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேற்றம் அடைவீர்கள். மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வீர்கள்.

கன்னி:
மனதிற்கு பிடித்த வாகனங்களை வாங்குவீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வேலைக்கான முயற்சிகள் ஈடேறும்.

துலாம்:
வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். செயல்களில் துரிதம் உண்டாகும். மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். உத்தியோகத்தில்  உயர் அதிகாரிகளிடம் மதிப்புகள் உயரும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனம் தெளிவு பெறும்.

விருச்சகம்:
எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். எண்ணிய செயல்களை முடிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பழைய நினைவுகளால் மனவருத்தங்கள் ஏற்படும். சில செயல்களை செய்து முடிக்க அலைச்சல்கள் அதிகரிக்கும். வாகனப் பராமரிப்பு செலவுகள் நேரிடும்.

தனுசு:
நெருக்கமானவர்களுடன் மனம்விட்டு பேசி பொழுதை கழிப்பீர்கள். தொழில் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். வீர தீரமான செயல்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். மனை விருத்திக்கான பணியில் இருந்துவந்த இடர்பாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

Also Read | செவ்வாய்க்கிழமை ராகு கால துர்கை வழிபாடு முறைகள்!

மகரம்:
நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மையடையும். வழக்குகள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். மனதிற்கு நெருங்கியவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தைரியத்துடன் பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள்.

கும்பம்:
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும்.

மீனம்: 
மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். மனை வாங்கும் முயற்சிகள் கைகூடும். ஆடம்பர பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். தொழில் முதலீடுகள் தொடர்பான மனக்குழப்பங்கள் குறையும்.

Also Read | உருவானது ‘டவ் தே’ புயல்; தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News