எல்பிஜி சிலிண்டர்களின் புதிய விலை பட்டியலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அக்டோபர் 1 ஆம் தேதியான இன்று வெளியிடப்பட்டுள்ள எல்பிஜி சிலிண்டர்களின் புதிய விலைப் பட்டியலில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால் வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் இன்று முதல் வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25.50 குறைந்துள்ளது. மும்பையில் ரூ.32.50 குறைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலையில் ரூ.36.50 குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.35.50 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் வணிக சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த விலை குறைப்பு உணவு பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க | அக்.1 முதல் புதிய கிரெடிட் / டெபிட் கார்டு முறை - டோக்கன் உருவாக்குவது எப்படி?
வணிக சிலிண்டர்களின் விலை
19 கிலோ எடை கொண்ட இண்டேன் எரிவாயு சிலிண்டர் அக்டோபர் 1, 2022 முதல் டெல்லியில் ரூ.1859.50-க்கு கிடைக்கும். மும்பையில் ரூ.1811.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1959.00-க்கும் கிடைக்கும். சென்னையில் இண்டேன் கேஸ் சிலிண்டர் ரூ.2009.50 ரூபாய்க்கு கொடுக்கப்படும். இதில் உற்றுநோக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தொடர்ந்து ஆறாவது மாதமாக வர்த்தக சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு ரெஸ்டாரன்ட், ஹோட்டல் மற்றும் கபேகளில் உள்ள உணவு பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும். முன்னதாக செப்டம்பர் மாதத்திலும் வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.100 வரை குறைக்கப்பட்டது.
அதேநேரத்தில் 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஜூலை 6 முதல் அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தலைநகர் டெல்லியில் Indane உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,053. மும்பையில் ரூ.1,052க்கும், கொல்கத்தாவில் ரூ.1,079க்கும், சென்னையில் ரூ.1,068-க்கும் கிடைக்கிறது.
CNG-PNG விலை உயர்வு
கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த சூழலில், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இயற்கை எரிவாயுவின் விலையை 40% அதிகரிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இயற்கை எரிவாயுவின் விலை mmBtu ஒன்றுக்கு $6.1-லிருந்து $8.57 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் பின்னரும் இன்று வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் நாட்டில் பணவீக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் வெறும் 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கிடைக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ