பிளஸ் சைஸில் இருப்பவர்களுக்காகவே பல பிராண்டுகளும் உடைகளும் இருக்கின்றன. இவை அல்லாமல், சாதாரண உடைகள் சிலவற்றை அணிந்தாலும் ஒல்லியாக தெரியலாம்.
ஆடைகளை தேர்ந்தெடுத்தல்:
ஆடைகளை தேர்ந்தெடுக்கும் விதத்தில் எப்போதும் கவனம் வேண்டும். எத்தனை ஆடைகள் வாங்கினாலும், எவ்வளவு விலை உயர்ந்த அல்லது விலை குறைந்த ஆடையை வாங்கினாலும் அதை கண்டிப்பாக போட்டுப்பார்த்து வாங்க வேண்டும். சில ஆடைகள் கண்ணால் பார்க்க நமக்கு பொருத்தமாக இருப்பது போல இருக்கும். ஆனால், அப்படி அதை அணியாமல் வாங்கிவிட்டால் பின்னர் அதை ஒரு சமயத்தில் எடுத்து உடுத்தும் போது பத்தாமல் போயிருக்கும். எனவே, ட்ரையல் ரூமில் ஆடைகளை போட்டுப்பார்த்து வாங்குவது ஆகச்சிறந்தது. ஆன்லைனில் ஆடைகள் வாங்குகிறீர்கள் என்றால் முதலில் அதற்கு கிடைத்துள்ள விமர்சனங்களை பார்க்க வேண்டும். இதையடுத்து ஆர்டர் செய்த ஆடை வந்தவுடன் முதல் வேளையாக அதை போட்டுப்பார்த்துவிட வேண்டும். அப்படி அது உங்களது சைஸ் இல்லை என்று தெரிந்தால் உடனடியாக ரிட்டர்ன் செய்து விட வேண்டும். இதனால் பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.
மேலும் படிக்க | இனி செப்பல் வாங்கும் போது இந்த விஷயங்களை பார்த்து வாங்குங்க!
உடலுக்கு ஏற்ற துணி..
உடலுக்கு ஏற்ற துணியை அணிவதும் நமது உடலை ஒல்லியாக காண்பிப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது. உதாரணத்திற்கு காட்டன் உடை உடலுடன் ஒட்டாமல் இருக்கும். அதனால் உடல் பெரிதாக தெரிவதை தடுக்கலாம். மேலும் கொஞ்சம் தளர்வான ஆடைகளை அணிவது சிறந்தது. அதற்கென்று மிகவும் தளர்வான ஆடைகளை அணியக்கூடாது. உங்கள் உடலை ஃபிட்டாக காண்பிக்கும் அதே நேரத்தில் உங்களது தொப்பையை காண்பிக்காத ஆடையை அணியலாம்.
உங்கள் உடலில் அதிக தசை இருக்கும் இடங்களில் மட்டும் தையல் பிரித்து மேல் தையல் போட்டுக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, உங்கள் கை பெரிதாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் தையல் பிரித்து கொள்ளலாம். வயிற்றுப்பகுதி பெரிதாக இருந்தால் இடுப்பு பகுதியில் மட்டும் தையல் பிரித்து கொள்ளலாம்.
ஒரே நிற ஆடைகள்:
ஒரே நிறத்தில் ஆடை அணிவது உங்கள் உடலை ஒல்லியாக காண்பிப்பதற்கு சிறந்த தேர்வாகும். அதிலும் டார்க் நிற உடைகளை அணிவது உங்கள் உடலை கச்சிதமாக இருப்பது போல காண்பிக்கும். கருப்பு அல்லது வெள்ளை நிற உடைகள் இதற்கு சிறந்த தேர்வாக இருக்கும். இதற்கு இன்னொரு காரணம், நமக்கு எதிரில் இருப்பவர்களுக்கு நாம் ஒரே நிறத்தில் ஆடை அணிந்திருந்தால் கவனம் முழுதும் நிறத்தின் மீது இருக்குமே அன்றி, உடலின் மீது இருக்காது.
ஆடைகளின் டிசைன்:
ஆடைகளில் உள்ள பொம்மை அல்லது டிசைன் கூட நமது உடல் அமைப்பை பிறர் கண்ணிற்கு கண்ணாடி போல காண்பிக்கவல்லது. கோடு போட்ட ஆடைகள் நம் உடலை ஸ்லிம்மாக காண்பிக்கும். அதிலும் சிறு சிரு கோடு போட்ட ஆடைகளும், சிறு சிறு கட்டம் போட்ட ஆடைகளையும் அணியலாம். இது போன்ற ஆடைகள் வயது வரம்பின்றி, பாலின பாகுபாடின்றி பலருக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடைகளிலும் கிடைக்கிறது.
மேலும் படிக்க தினமும் ‘இந்த’ 5 விஷயங்களை செய்தால் உங்கள் வாழ்க்கையே மாறும்..! ட்ரை பண்ணி பாருங்க..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ