பிறந்தநாள் பேபி சிம்பன்ஸி சுஜிக்கு வாழ்த்து சொல்லுங்க!!

ஹைதராபாதின் நேரு Zooவில் சிம்பன்ஸிக்கு கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 15, 2020, 11:44 PM IST
  • சுஜி சிம்பன்ஸியின் 34வது பிறந்தநாள் இது
  • சுஜிக்கு ஜோடி தேடும் படலம் தொடர்கிறது
  • சிம்பன்ஸிகள் 40 வயது வரை கருதரிப்பவை
பிறந்தநாள் பேபி சிம்பன்ஸி சுஜிக்கு வாழ்த்து சொல்லுங்க!! title=

புதுடெல்லி: ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் பிறந்தநாள் விழா களைகட்டியது. அதிகாரிகள் மற்றும் விலங்குகளை பராமரிக்கும் பணியாளர்களும் தங்கள் செல்ல சிம்பான்ஸிக்கு பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.  

உங்களுடைய பிறந்தநாளை எப்படி கொண்டாடினீர்கள் என்று நினைத்துப் பாருங்கள்! கண்டிப்பாக மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டு, இனிப்பு  ஊட்டி மகிழ்ந்து, பரிசு கொடுத்து கொண்டாடியிருக்கலாம்.  ஆனால் ஒரு சிம்பன்ஸிக்கும் இப்படி பிறந்த நாள் கொண்டாடியதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

இந்த கொரோனா காலத்தில் நடக்காதது எது இருக்கிறது என்று கேட்கிறீர்களா?  ஆமாம் கண்ணுக்கு தெரியாத வைரஸ் உலகை ஆட்டிப் படைப்பதோடு, பலருக்கு அன்பையும் வாரிக் கொடுக்கும் மனதையும் கொடுத்திருப்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். 
நம்பவில்லையென்றால், ஹைதராபாதில் சிம்பன்ஸிக்கு பிறந்தநாள் கொண்டாடிய இந்த நிகழ்ச்சியை கேட்டால் வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை உணர்வீர்கள். 

 Read Also | COVID-19க்கு சித்த மருத்துவ சிகிச்சை மட்டுமே கொடுக்கும் ஆராய்ச்சி விரைவில் தொடங்கும்

ஹைதராபாத்தில் நேரு விலங்கியல் பூங்காவும், கொரோனாவின் தாக்கத்தால் மூடுவிழாவை கண்டது. பார்வையாளர்களும் வருவதில்லை. வெளியில் போக முடியவில்லை என்று மனிதர்கள் தவித்தால், தங்களை பார்க்க யாரும் வருவதில்லை என்று விலங்குகளும் ஏங்கிப் போகின்றனவாம்!
மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் சுஜி என்ற இங்குள்ள சிம்பன்ஸியும் உற்சாகமிழந்து காணப்பட்டது.  அதை பார்த்து மிருககாட்சி பணியாளர்களும் ஏமாற்றமடைந்துளனர்.
 
2011 இல் ஹைதராபாத் மிருகக்காட்சிசாலைக்கு சுஜி என்ற இந்த சிம்பன்சி பரிசாக வந்து சேர்ந்தது. அங்கு ஒரு தனியான பிரிவில் சுஜி தங்க வைக்கப்பட்டுள்ளது.
சுஜியின் 34 வது பிறந்தநாளை பூங்கா நிர்வாகமும், ஊழியர்களும் கொண்டாடி, சிம்பன்சிக்கும், அங்குள்ள பிற விலங்குகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

சுஜியின் பிறந்த நாளைக் கொண்டாட மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் கேக் தயாரித்தனர். அது  மட்டும் இல்லாமல், சுஜிக்கு பிடித்த பப்பாளி, வாழைப்பழம் என உணவு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டன. இதைத்தவிர, சஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டையும் கொடுத்து பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்தி அசத்தினார்களாம்!

Read Also | வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுவதும் கொரோனாவின் அறிகுறியா?

சுஜியின் தங்குமிடத்தில் டூத்பேஸ்டும், பிரஷ்ஷும் வைக்கப்பட்டிருக்கும் என்று பராமரிக்கும் பணியில் இருக்கும் பணியாளர்கள் கூறுகின்றனர்.  அதுமட்டுமல்ல, தனக்கு விரிக்கப்பட்டிருக்கும் பெட்ஷீட் புதியதா இல்லையா என்பதைப் பார்க்க ஒவ்வொரு நாள் இரவும் தூங்குவதற்கு முன்னால் உன்னிப்பாக பார்த்து தெரிந்து கொள்வாராம் சுஜி… சுஜிக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பெட்ஷீட் கொடுக்கிறார்களாம!

சுஜிக்கு ஜோடி தேடும் பணி தொடர்கிறது 

சுஜிக்கு ஒரு ஆண் துணை வேண்டும் என்ற தேடுதல் வேட்டையில் மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தற்போது மும்முரமாக இருக்கிறார்கள். ஒரு சிம்பன்சியின் சராசரி வயது 50 ஆண்டுகள். பெண் சிம்பன்ஸி 40 வயது வரை கருத்தரிக்கக்கூடியவை.  சுஜிக்கு இப்போது தானே 34 வயது ஆகிறது.  சீக்கிரமாக வரன் பார்த்து ஜோடி சேர்த்து வைத்தால், குழந்தை குட்டி என்று குடும்பமும் விருத்தியாகும்…  எனவே, அடுத்த ஆண்டிற்குள் ஜோடியுடன் இருப்பாயாக என்று சுஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்வோம்.  Happy birthday Suji… 

Trending News