Car Loan: மிகவும் மலிவான கார் கடன்களை பெற சூப்பர் டிப்ஸ் இதோ

கார் வாங்க வங்கிகளில் கடன் வாங்கப்போகிறீர்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம்? உங்கள் கடனை திரும்பச்செலுத்த எளிதான வழிமுறைகள் என்ன?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 13, 2021, 04:20 PM IST
  • வங்கிகள் பெரும்பாலும் உங்கள் சம்பளத்தை மனதில் வைத்து கார் கடன்களை வழங்குகின்றன.
  • மலிவு விலையில் கார் கடன்களை வழங்கும் வங்கிகளில் பாங்க் ஆப் பரோடா முன்னிலையில் உள்ளது.
  • நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு கார் கடன் 7.70 சதவீதத்தில் கிடைக்கிறது.
Car Loan: மிகவும் மலிவான கார் கடன்களை பெற சூப்பர் டிப்ஸ் இதோ title=

Car Loan: ஒரு நல்ல காரை வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. எனினும், பலரால் மொத்தமாக பணம் செலுத்தி கார் வாங்க முடிவதில்லை. இதற்காக பலரும் கடனுக்கு விண்ணப்பிக்கிறார்கள். 

தற்போது, ​​சரியான வழிகாட்டுதல் இல்லாததால், மக்கள் பெரும்பாலும் சரியான திட்டமிடல் இல்லாமல் விலையுயர்ந்த கார்களை வாங்குகிறார்கள். அதன் கடன் தவணை மற்றும் காரின் (Cars) பராமரிப்பு செலவு ஆகியவை அவர்களின் பணச் சுமையை அதிககரிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், செலவுகளில் சாதுர்யமான சில மாற்றங்களை செய்தால், கார் கடனையும் எளிதில் மலிவாக மாற்றலாம்.

EMI உங்கள் மாத சம்பளத்தில் 15% மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள் 

முதலில் நீங்கள் வாங்க விரும்பும் காரின் விலை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எந்த கால அளவில் நீங்கள் கடன் தவணையை எளிதான கட்டணத்தில் திருப்பிச் செலுத்த முடியும் என்பதை கணக்கிட வேண்டும். உங்கள் காரின் ஈ.எம்.ஐ-ஐ உங்கள் மாத சம்பளத்தில் 15 % ஆக வைத்திருப்பது இதற்கான எளிதான வழியாக இருக்கும். 

காரின் விலையில் 20% வரை டவுன் பேமெண்ட் செய்யவும் 

வங்கிகள் பெரும்பாலும் உங்கள் சம்பளத்தை மனதில் வைத்து கார் கடன்களை வழங்குகின்றன. மறுபுறம், ஒரு கார் கடனைக் கொடுக்கும் போது, ​​காரின் விலையில் 80 முதல் 90 சதவிகிதம் மட்டுமே வங்கி வழங்குகிறது. அதில் மீதமுள்ள தொகையை நீங்கள் அளிக்க வேண்டும். 

ALSO READ: Best CNG Cars: பெட்ரோல் விலை உயர்வில் இந்த கார்கள் சிறந்த தேர்வாக இருக்கும்

ஆகையால், கார் வாங்கும் எண்ணத்தில் இருந்தால், அதற்கு முன்னர், நீங்கள் சேமிப்பை சிறிது அதிகரித்து நல்ல தொகையை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இப்படி செய்தால், கார் கடனின் அளவை நீங்கள் குறைக்கலாம். கார் வாங்கும்போது டவுன் பேமெண்டாக சுமார் 20 முதல் 30 சதவிகிதம் அளிப்பதன் மூலமும் கார் கடன் தொகையை குறைக்கலாம்.

பேங்க் ஆப் பரோடாவில் மிகவும் மலிவான கார் கடன் கிடைக்கிறது

தற்போது, ​​மலிவு விலையில் கார் கடன்களை வழங்கும் வங்கிகளில் பாங்க் ஆப் பரோடா (Bank Of Baroda) முன்னிலையில் உள்ளது. பேங்க் ஆப் பரோடா கார் கடன்களை 7.25 சதவீதம் என்ற விகிதத்தில் வழங்கி வருகிறது. இதற்குப் பிறகு, கனரா வங்கி 7.30 சதவீத வருடாந்திர வீதத்தில் கடன்களை வழங்கி வருகிறது. 

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (SBI) வாடிக்கையாளர்களுக்கு கார் கடன் 7.70 சதவீதத்தில் கிடைக்கிறது. அடுத்ததாக, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு 7.90 சதவீதம் என்ற விகிதத்தில் கடன்கள் வழங்கப்படுகின்றன. ஆக்சிஸ் வங்கியில் 8.65 சதவீதமும், ஃபெடரல் வங்கியில் கார் கடனுக்கு 8.50 சதவீத வருடாந்திர வட்டியும் வசூலிக்கப்படுகின்றன.

ALSO READ: Maruti Suzuki கார் வாங்கப்போறீங்களா? உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News