கும்ப ராசிக்கு செல்லும் சனி; ஏழரை நாட்டு சனியினால் நெருக்கடியில் ‘சில’ ராசிகள்!

சனிப்பெயர்ச்சி 2023: ஜோதிடத்தில், சனி தேவன் கலியுகத்தின் நீதிபதி மற்றும் கர்ம பலனை கொடுக்கும் பகவான் என்று அழைக்கப்படுகிறார். அனைவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்ப பலன்களை வழங்குகிறார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 17, 2022, 11:47 AM IST
  • ஏழரை நாட்டு சனியின் போது, வேலை-வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம்.
  • சில நேரங்களில் விபத்துக்களிலும் சிக்க நேரிடலாம்.
  • சனியின் நிலை ஜாதகத்தில் சுபமாக இருக்கும் நபர்களுக்கு, பாதிப்பு அதிகம் இருப்பதில்லை.
கும்ப ராசிக்கு செல்லும் சனி; ஏழரை நாட்டு சனியினால் நெருக்கடியில் ‘சில’ ராசிகள்! title=

சனிப்பெயர்ச்சி 2023: ஜோதிடத்தில், சனி தேவன் கலியுகத்தின் நீதிபதி மற்றும் கர்ம பலனை கொடுக்கும் பகவான் என்று அழைக்கப்படுகிறார். அனைவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்ப பலன்களை வழங்குகிறார். நல்ல செயல்களைச் செய்பவர்களுக்கு, சனி தேவன் சுப பலன்களைத் தருகிறார். சனி தேவரின் அருள் அவர் மீது எப்போதும் இருக்கும். தவறான செயல்களைச் செய்பவர்கள், பிறருக்கு கேடு விளைவிப்பவர்கள் மீது சனி பகவான் கெட்ட பார்வையை செலுத்தி, அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கிறார்.

அனைத்து கிரகங்களைப் போலவே, சனி தேவனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகிறார். சனிபகவான் ராசியை மாற்றும் போது சில ராசிக்காரர்களுக்கு சுப பன்களும் கிடைக்கும். ஏப்ரல் 2022 மற்றும் ஜனவரி 2023 க்கு இடையில்,  சனி பகவான் பல முறை தனது நிலையை மாற்றிக்கொண்டிருக்கிறார். 2022 ஏப்ரல் மாதத்தில், சனி ராசி மாறியது. இதற்குப் பிறகு, சனி பகவான் ஜூலை 2022 வக்ர நிலையில் பெயர்ச்சி ஆனார்.  2022, அக்டோபர் 23ம் தேதி வக்ர பெயர்ச்சியாக உள்ளது. இதற்குப் பிறகு சனி பகவான் 2023 ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழைகிறார். சனி மகர ராசியில் இருந்து விலகி கும்ப ராசிக்கு வந்த பிறகு சில ராசிகளில் ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசையில் இருந்து விடுதலை பெறுகிறார்கள். ஆனால் சில ராசிக்காரர்கள் ஏழரைநாட்டு சனியின் பிடியில் சிக்குகின்றனர்.

மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்

2023, ஜனவரி 17க்குப் பிறகு, மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் சனி தசையிலிருந்து விடுதலை பெறுகின்றனர் என ஜோதிடக் கணக்கீடுக கூறுகின்றன. தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் முடிவுக்கு வரும். இந்த வகையில் இந்த 3 ராசிகளுக்கும் சனியின் தாக்கம் முடிந்து, வாழ்க்கையில் சிறப்பான நாட்கள் தொடங்கும். இடைநிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கும். பண வரவினால் நிதி நிலை உயரும். செல்வம், கௌரவம் உயரும். நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபமும், ஆரோக்கியமும் மேம்படும். மறுபுறம், 2023 ஜனவரி மாதம் சனி தேவன் கும்ப ராசிக்குள் நுழைவதால், சில ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசையின் பிடியில் சிக்குவார்கள்.

2023 ஜனவரி மாதம் முதல், மீனம், மகரம், கும்பம்  ஆகிய மூன்று ராசிகளும் ஏழரை நாட்டு சனியின் பிடியில் சிக்குவார்கள். அதே நேரத்தில், 2023 ஜனவரியில், கடகம் விருச்சிகள் ஆகிய ராசிகள் சனி திசையில் சிக்குவார்கள். ஏழரை நாட்டு சனியின் போது, வேலை-வியாபாரத்தில் நஷ்டம், தேவையில்லாத தடைகள், வேலை கெடுதல், பண இழப்பு, உறவுகளில் விரிசல், ஆரோக்கிய பாதிப்பு ஆகியவை ஏற்படும். சில நேரங்களில் விபத்துக்களிலும் சிக்க நேரிடலாம். இருப்பினும், சனியின் நிலை ஜாதகத்தில் சுபமாக இருக்கும் நபர்களுக்கு, பாதிப்பு அதிகம் இருப்பதில்லை. அதுமட்டுமின்றி சனியின் பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற சில பரிகாரங்கள் செய்வதும் பலன் அளிக்கும். சனிபகவானின் அருளைப் பெறவும், ஏழரை நாட்டு சனி மற்றும் சனி மகாதசையின் போது ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்கவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய பரிகாரங்களை செய்யலாம்.

சனிக்கிழமை அனுமன் சாலிசா பாராயணம் செய்யவும். ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி சாலிசா, சனி ஸ்தோத்திரம் அல்லது சனி தசரத்கிருத ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது நல்லது. தேவை இருக்கும் ஒருவருக்கு தானம் செய்யுங்கள். அவருக்கு உணவு, உடைகள், காலணிகள் மற்றும் செருப்புகளை தானம் செய்யுங்கள். நாய்க்கு உணவு கொடுங்கள். இது சனி பகவானை மகிழ்விக்கிறது. இது தவிர கருப்பு எள், கருப்பு வஸ்திரம் தானம் செய்வதும் நல்லது. 

மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்!

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News