Big offer LIC: ஆண்டு பிரீமியம் வெறும் ரூ .100... ஆயுள் கவர் மற்றும் ரூ .75,000 வரை கிடைக்கும்..

எல்.ஐ.சி சமூக பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் 'ஆம் ஆத்மி பீமா யோஜனா' பாலிசியை அறிமுகப்படுத்தி உள்ளது. இது சமூகத்தின் அமைப்புசாரா மக்களுக்கு வாழ்நாள் பாதுகாப்பு அளிக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 4, 2020, 05:13 PM IST
Big offer LIC: ஆண்டு பிரீமியம் வெறும் ரூ .100... ஆயுள் கவர் மற்றும் ரூ .75,000 வரை கிடைக்கும்.. title=

புது டெல்லி: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) சமூக பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த திட்டத்தின் பெயர் "ஆம் ஆத்மி பீமா யோஜனா" (Aam Aadmi Bima Yojana) ஆகும். இது சமூகத்தின் அமைப்புசாரா மக்களுக்கு வாழ்நாள் பாதுகாப்பு  (Lifetime coverage) அளிக்கும். அமைப்புசாரா துறையில் பணிபுரியும் மக்களின் குடும்பத்திற்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக, எல்.ஐ.சி இந்த ஆம் ஆத்மி பீமா யோஜனாவை அறிமுகப்படுத்தியுள்ளது. எல்.ஐ.சியின் (LIC) இந்த ஆம் ஆத்மி பீமா யோஜனாவை இந்திய அரசின் நிதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எல்.ஐ.சி திட்டத்தின் கீழ், நிலமற்ற கிராமப்புற விவசாயிகளுக்கு தங்கள் குடும்பத்தின் தலைவராக இருப்பவர்களுக்கு வாழ்நாள் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மேலும் இந்த பாலிசியை ஊனமுற்றோர் அல்லது குடும்பத்தில் ஒருவர் மட்டும் சம்பாதிப்பவர் இருந்தால், அவருக்கும் இந்த பாலிசி பொருந்தும். அவரும் வாங்கலாம்.

எல்.ஐ.சி ஆம் ஆத்மி பீமா யோஜனாவுக்கு (Aam Aadmi Bima Yojana)  தகுதி

எல்.ஐ.சி ஆம் ஆத்மி பீமா யோஜனா விண்ணப்பதாரர் 18 வயது முதல் 59 வயது வரை இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தனது குடும்பத்தின் தலைவராக இருக்க வேண்டும் அல்லது அவரது குடும்பத்தின் ஒற்றை சம்பாதிக்கும் உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்க வேண்டும் அல்லது நிலமற்ற கிராமப்புற இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். பிபிஎல் (Below Poverty Line) மேலே உள்ளவர்களும் சேரலாம்.  ஆனால் அவர்கள் வாக்காளர் பட்டியலில் சேராமல் நகர்ப்புற இந்தியாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். அந்த தகுதி இருந்தால் எல்.ஐ.சி ஆம் ஆத்மி பீமா யோஜனாவுக்கும் (Aam Aadmi Bima Yojana) விண்ணப்பிக்கலாம்.

எல்.ஐ.சி ஆம் ஆத்மி பீமா யோஜனாவின் நன்மைகள்:

இந்த எல்.ஐ.சி திட்டத்தின் கீழ், பாலிசியின் காலத்தில் ஒருவர் சாதாரண சூழ்நிலையில் இறந்தால், அவரது நாமினிக்கு (Nominee) ரூ .30,000 வழங்கப்படும். இருப்பினும், தற்செயலான மரணம் ஏற்பட்டால், பாலிசிதாரரின் Nominee-க்கு எல்.ஐ.சி யிலிருந்து ரூ .75,000 வரை உரிமை கோரலாம். பாலிசிதாரருக்கு விபத்து காரணமாக ஓரளவு ஊனமுற்றவராக இருந்தால்,  பாலிசிதாரருக்கு ரூ .37,500 உரிமைகோரல் தொகை வழங்கப்படும். இந்த எல்.ஐ.சி பாலிசியில் பாலிசிதாரரின் இரண்டு குழந்தைகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த எல்.ஐ.சி திட்டத்தின் கீழ், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பாலிசிதாரரின் இரண்டு குழந்தைகளுக்கு படிப்பு தொடர அரை ஆண்டுக்கு ரூ .100 உதவித்தொகை வழங்கப்படும்.

எல்.ஐ.சி ஆம் ஆத்மி பீமா யோஜனா பிரீமியம் பாலிசி

இந்த லைஃப் இன்சூரன்ஸ் மூலம் சாதாரண மரணத்திற்கு ரூ .30,000 வழங்கப்படும். இதற்கு எல்.ஐ.சி பிரீமியம் ரூ .200 ஆகும். அதில் 50 சதவீதம் பாலிசிதாரரால் செலுத்தப்படுகிறது, மீதமுள்ள 50 சதவீதத்தை அரசு தரப்பில் கிடைக்கும். எனவே, பாலிசிதாரருக்கு, ஆம் ஆத்மி பீமா யோஜனா பாலிசிக்கான எல்ஐசி பிரீமியம் ரூ .100 மட்டுமே.

Trending News