குட் நியூஸ்; Paytm மூலம் இலவச LPG சிலிண்டர் பெறலாம்

Indane, HP Gas மற்றும் Bharat Gas ஆகிய 3 பெரிய எல்பிஜி நிறுவனங்களின் சிலிண்டர் முன்பதிவுக்கு இந்த கேஷ்பேக் சலுகை பொருந்தும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 7, 2022, 08:53 AM IST
குட் நியூஸ்; Paytm மூலம் இலவச LPG சிலிண்டர் பெறலாம் title=

Paytm இன்று தனது இயங்குதளத்தின் மூலம் LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் புதிய பயனர்களுக்கு அற்புதமான சலுகைகளை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்கள் ஏற்கனவே தங்கள் எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்ய Paytm ஐப் பயன்படுத்துகின்றனர். தற்போது, பாரத் கேஸிற்கான முன்பதிவு Paytm செயலியில் செய்யப்படுகிறது. சமீபத்திய சலுகையின் மூலம், புதிய பயனர்கள் தங்கள் முதல் முன்பதிவில் ₹30 பிளாட் கேஷ்பேக்கைப் பெறலாம். Paytm ஆப்ஸில் பணம் செலுத்தும் போது, “FIRSTCYLINDER” என்ற ப்ரோமோகோடைப் பயன்படுத்தினால் போதும்.

இந்த கேஷ்பேக் (Paytm) சலுகை மூன்று பெரிய LPG நிறுவனங்களின் சிலிண்டர் (LPG Cylinder) புக்கிங்கிற்கும் பொருந்தும்; Indane, HP Gas, மற்றும் BharatGas. Paytm Postpaid எனப்படும் Paytm Now Pay Later திட்டத்தில் பதிவுசெய்து சிலிண்டர் புக்கிங்கிற்கு அடுத்த மாதம் பணம் செலுத்தும் விருப்பம் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

ALSO READ | அமேசான் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி !

கூடுதலாக, ஏற்கனவே உள்ள Paytm பயனர்கள் தங்கள் சிலிண்டரை இலவசமாகப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. Paytm பயன்பாட்டில் பணம் செலுத்தும் செயல்முறையை நிறைவு செய்யும் முன் அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் கூப்பன் குறியீட்டை ‘FREEGAS’ பயன்படுத்த வேண்டும்.

முன்பதிவு செய்வது எப்படி:
* 'Book Gas Cylinder' க்குச் செல்லவும்.
* எரிவாயு வழங்குநரைத் தேர்ந்தெடுக்கவும்.
* உங்கள் மொபைல் எண்/எல்பிஜி ஐடி/நுகர்வோர் எண்ணை உள்ளிடவும்
* உங்களுக்கு விருப்பமான முறையில் கட்டணத்தை முடிக்கவும்
* அருகிலுள்ள gas ஏஜென்சி சிலிண்டரை பதிவு செய்த முகவரிக்கு வழங்கும்.

ALSO READ | இன்ஸ்டாகிராமில் நேரத்தை வீணடிக்காமல் இருப்பது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News