Best Electric Cycles: புதிய ரேஞ்சுகளை சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது Nexzu Mobility

மின்சார வாகனங்களின் ஸ்டார்ட்-அப் நிறுவனமான நெக்ஸு (Nexzu), புதிய மின்சார சைக்கிள்களின் வகைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக நேற்று தெரிவித்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 29, 2021, 11:13 PM IST
  • பல நிறுவனங்கள் மின்சார சைக்கிள் உற்பத்தியில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.
  • Nexzu புதிய மின்சார சைக்கிள்களின் வகைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக நேற்று தெரிவித்துள்ளது.
  • நெக்ஸு மொபிலிட்டிக்கு எதிர்காலத்தில் உற்சாகமான தருணங்கள் காத்திருக்கின்றன-நிறுவனம்.
Best Electric Cycles: புதிய ரேஞ்சுகளை சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது Nexzu Mobility  title=

மாற்றமும் முன்னேற்றமும்தான் வாழ்க்கையின் இன்றியமையாத இரு அம்சங்கள். நம் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் நாம் மாற்றத்தைக் கண்டு வருகிறோம். அந்த வகையில், நாம் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திர்கு செல்லும் விதங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

போக்குவரத்துத் துறையில் தற்போது வந்துள்ள முகப்பெரிய மாற்றம், மின்சார வாகனகள் ஆகும். இந்தியா மின்சாரா வாகனங்களை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. மின்சார வாகனகளுக்காக தன்னை தயார் செய்து வருகிறது. மின்சார கார்கள், மின்சார ஸ்கூட்டிகள் என வந்து கொண்டிருக்கும் நிலையில் மிசார சைக்கிள்களும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன. பல நிறுவனங்கள் மின்சார சைக்கிள் உற்பத்தியில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.

மின்சார வாகனங்களின் (Electric Vehicles) ஸ்டார்ட்-அப் நிறுவனமான நெக்ஸு (Nexzu), புதிய மின்சார சைக்கிள்களின் வகைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக நேற்று தெரிவித்துள்ளது. இந்த தொடரில் ஸ்டெப்-அப் சைக்கிள்கள், கார்கோ வர்ஷன் சைக்கிள்கள், நீண்ட தூரம் செல்லக்கூடிய மாற்றக்கூடிய பேட்டரிக்களை கொண்டுள்ள சைக்கிள்கள் ஆகியவை இருக்கும் என நிறுவனம் மேலும் கூறியுள்ளது. 

ALSO READ: இந்தியாவின் Best Electric Cycles: முழு சார்ஜில் 100 கி.மீ., இன்னும் பல வசதிகள்!!

தற்போது, ​​நெக்ஸு மொபிலிட்டி ரோம்பஸ், ரோம்பஸ் +, ரோட்லார்க் மற்றும் ரோட்லார்க் கார்கோ போன்ற மின்சார சைகிள்களை விற்பனை செய்கிறது. நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் (Electric Scooter) வகைகளில் டெக்ஸ்ட்ரோ மற்றும் டெக்ஸ்ட்ரோ + ஆகியவை உள்ளன. 

"நெக்ஸு மொபிலிட்டிக்கு எதிர்காலத்தில் உற்சாகமான தருணங்கள் காத்திருக்கின்றன. பல மாதங்கள் செய்யப்பட்ட விரிவான ஆராய்ச்சிகள் மற்றும் முன்னேற்ற பகுப்பாய்வுகளுக்குப் பிறகு, எங்கள் எதிர்காலத் திட்டங்களை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் புதிய அறிமுகங்களின் மூலம் அனைத்து வாடிக்கையாளர்களின் தேவைக்கும் ஒரு தீர்வை முன்வைத்து எங்கள் தயாரிப்புகளுக்கான போர்ட்ஃபோலியோவை பலப்படுத்துவோம். மின்சார வாகனங்களுக்கான துறையில் வரும் காலத்தில் மிக அதிக முன்னேற்றம் இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். மின்சார வாகனங்களின் இந்த புரட்சியின் முன்னணியில் இருப்பதற்கு பெருமைப்படுகிறோம். இந்த மின்சார வாகனங்கள் இந்தியர்களால் இந்தியர்களுக்காக உருவாக்கப்படுவதால், இதன் சிறப்பு இன்னும் அதிகமாகிறது" என்று  Nexzu Mobility-யின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஷோனாக் தெரிவித்தார். 

அதன் புதிய மின்சார சைக்கிள்களில் (Electric Cycle) அதிக சுமை சுமக்கும் திறன், அதிக சக்திவாய்ந்த பேட்டரிகள், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் செயலி-அடிப்படையிலான பயனர் இடைமுகம் (app-based user interface) இருக்கும் என்று நிறுவனம் கூறியது.

"இப்போது, ​​Nexzu Mobility அதன் பரிணாம வளர்ச்சியை நோக்கி அடுத்த கட்டத்தை எடுக்க உள்ளது. எதிர்காலத்தில், நிறுவனம் மின்சார சைக்கிள்களின் புதிய ரேஞ்சை அறிமுகப்படுத்தும். இதில் ஸ்டெப்-த்ரூ சைக்கிள்கள், கார்கோ வர்ஷன் சைக்கிள்கள், புதிய நீண்ட தூரம் செல்லக்கூடிய மாற்றக்கூடிய பேட்டரிக்களை கொண்டுள்ள சைக்கிள்கள் ஆகியவை இருக்கும்" என்று நிறுவனம் கூறியது.

ALSO READ: OLA Electric Scooter: இந்திய சாலைகளில் கலக்க வருகிறது, விரைவில் அறிமுகம், விவரம் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News