விலைவாசி ஏறிவிட்டது என்று எப்போதும் கவலைப்படுபவர்களுக்கு இதுவொரு அதிர்ச்சியூட்டும் செய்தி... ஒரு எலுமிச்சம்பழம் நாற்பாதாயிரம் ரூபாய்க்கு விற்பனையான விநோதம். கரும்பின் விலையோ 17,301 ரூபாய்!
மாட்டுப்பொங்கலன்று (ஜனவரி 15, 2022) சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே மேலதெரு கீழத்தெரு பகுதியில் வெள்ளை சேலை அணிந்துக் கொண்டு ஊர் மக்கள் பொங்கல் (Pongal 2022) வைத்து கொண்டாடினர்.
அந்த ஊரில் உள்ள கீழத்தெரு, மேலத்தெரு, சலுகைபுரம் பகுதி மக்கள், தங்களது காவல் தெய்வங்களாக பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
மாட்டுப்பொங்கலான நேற்று, பெண்கள் வளையல், மெட்டி, கொலுசு தவிர்த்து வெள்ளை சேலை அணிந்து கோயில் வாசலில் பொங்கல் வைத்தனர். அம்மனுக்கு நேர்த்திக்கடனாக தொட்டில் கரும்பு கட்டினர்.
விழா முடிந்ததும் நேர்த்திக்கடனாக செலுத்தபட்ட கரும்புகள், விரதமிருந்து அம்மன் காலடியில் வைத்த எலுமிச்சை ஆகியவை ஏலம் விடப்பட்டன.
இந்த ஏலத்தில் (Bid Auction for Prasadam) உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் கரும்பு, ஏலம் எடுத்தால், நினைத்த காரியம் கைகூடும் என்பதும், எலுமிச்சையை எடுத்தல் ஆண்குழந்தை பிறக்கும் என்பதும் அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
ALSO READ | Pongal 2022: திகட்டாமல் தித்திக்கும் தைப்பொங்கல் கற்றுத்தரும் வாழ்க்கைப் பாடங்கள்
இதனால் அவற்றை போட்டி போட்டு கொண்டு பலரும் ஏலம் எடுத்தனர். இதில் மேல தெருவில் நடந்த ஏலத்தில் ஒரு கரும்பு ரூ.17,301க்கு ஏலம் போனது. சதீஸ் என்பவர் அதிகபட்ச விலையைக் கூறி கடவுளுக்கு படைக்கப்பட்ட கரும்பை கைப்பற்றினார்.
அதே போல கீழத்தெருவில் நடந்த ஏலத்தில் ஒரு எலுமிச்சை பழத்தை ஜெயக்குமார் என்பவர். ரூ.40,001.க்கு வாங்கினார். இங்கு, ஒரு கரும்பு 15, 001 ரூபாய்க்கு ஏலம் போனது. இங்கு கரும்பை ஏலம் எடுத்தவர் சரவணன் என்பவர்.
இந்த விநோத ஏலம் குறித்து அப்பகுதி மக்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
‘எங்கள் தெய்வங்களுக்கு முன்பு ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி அனைவரும் சமம் என்பதற்காக அணிகலன்கள் அணியாமல் ஒரே மாதிரியாக உடையணிந்து பொங்கல் வைப்போம். இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே விரதம் இருக்க தொடங்கி விடுவோம். ஏலம் எடுப்போருக்கு நினைத்த காரியம் நடப்பதால் ஆண்டுதோறும் ஏலத்தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது’.
ALSO READ | குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR