7th Pay Commission: அடி தூள்.. டிஏ அரியர் பற்றிய மாஸ் அப்டேட்!! குஷியில் ஊழியர்கள்

7th Pay Commission: மத்திய மோடி அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகையை விரைவில் வழங்க உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 18, 2023, 10:36 AM IST
  • டிஏ நிலுவைத் தொகை பற்றிய நல்ல செய்தி கிடைத்தது.
  • அகவிலைபப்டி ஏன் முடக்கப்பட்டது?
  • செப்டம்பரில் டிஏ உயர்த்தப்பட வாய்ப்பு?
7th Pay Commission: அடி தூள்.. டிஏ அரியர் பற்றிய மாஸ் அப்டேட்!! குஷியில் ஊழியர்கள் title=

ஏழாவது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஊழியர்கள் பல விஷயங்களுக்காக மத்திய அர்சிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவற்றில் ஒன்று 18 மாத டிஏ அரியர் தொகை. அது குறித்து தற்போது ஒரு அப்டேட் வந்துள்ளது. 18 மாத அரியர் தொகைக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு இது நல்ல செய்தியாக இருக்கும். மத்திய மோடி அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகையை விரைவில் வழங்க உள்ளது. இது அனைவருக்கும் ஒரு பெரிய பரிசாக இருக்கும்.

இது தவிர, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியும் விரைவில் அதிகரிகப்பட உள்ளது. இந்த காரணங்களால் வரும் மாதங்களில் ஊழியர்களுக்கு பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன என கூறினால் அது மிகையல்ல. இந்த முறை அதாவது ஜூலை 2023 முதல் அரசாங்கம் ஊழியர்களின் அகவிலைப்படியை 3 அல்லது 4 சகவிகிதம் உயர்த்தக்கூடும் என நம்பப்படுகின்றது. இது அடிப்படை சம்பளத்தை நன்றாக அதிகரிக்கும். இது பற்றிய அறிவிப்பை இன்னும் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும், இது குறித்த ஊடக அறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. 

டிஏ நிலுவைத் தொகை பற்றிய நல்ல செய்தி கிடைத்தது

தற்போது மத்திய மோடி அரசு, முடக்கப்பட்ட அகவிலைப்படியின் நிலுவைத் தொகையை ஊழியர்களுக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இது குறித்த பேச்சுவார்த்தைகள் முழு முனைப்புடன் நடந்து வருகின்றன. இந்தத் தொகையை விரைவில் அரசு ஊழியர்களின் கணக்கில் போடலாம் என கூறப்படுகின்றது. அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலகள் நடக்கவுள்ளன. அப்படிப்பட்ட நிலையில், ஊழியர்களை மகிழ்விக்க அரசு இந்த நடவடிக்கையை எடுக்கக்கூடும். இது நடந்தால் ஊழியர்களின் கணக்கில் பம்பர் பண வரவு இருக்கும் என்பது உறுதி. 

மேலும் படிக்க | பண்டிகையை கவலையின்றி கொண்டாட... ஊழியர்களுக்கு 2 மாநில அரசுகள் கொடுக்கும் பரிசு!

அகவிலைபப்டி ஏன் முடக்கப்பட்டது

ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2021 வரை கொரோனா வைரஸ் தொற்று காலத்தில், அப்போது உருவான அசாதாரண சூழ்நிலை காரணமாக அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை முடக்கியது. அந்த தொகை தேவையில் இருந்த நலிவுற்ற மக்களின் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. நிலைமை சரியானவுடன் ஒரே நேரத்தில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகமாக உயர்த்தியது. எனினும், முடக்கப்பட்ட காலத்திற்கான அரியர் தொகை இன்னும் அளிக்கப்படவில்லை. இதற்காக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்போது இந்த தொகையை அரசு கணக்கில் டெபாசிட் செய்யக்கூடும் என நம்பப்படுகிறது. இது நடந்தால், உயர் பதவியில் உள்ள ஊழியர்களின் கணக்கில் ரூ.2 லட்சத்துக்கு மேல் பணம் வரலாம்.

செப்டம்பரில் டிஏ உயர்த்தப்பட வாய்ப்பு?

அகவிலைபப்டி செப்டம்பரில் அதிகரிக்கப்படும் என்றும், ஜூலை 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. தற்போது, கிட்டத்தட்ட ஒரு கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர். கடைசியாக, 2023 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி டிஏவில் திருத்தம் செய்யப்பட்டு, ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்தது. முன்னதாக, டிசம்பர் 2022 இல் முடிவடைந்த காலத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் 12 மாத சராசரியின் சதவீத அதிகரிப்பின் அடிப்படையில் மத்திய அரசு அப்போது அகவிலைப்படியை நான்கு சதவீத புள்ளிகள் அதிகரித்து 42 சதவீதமாக உயர்த்தியது.

அகவிலைபப்டி ஜனவரி மற்றும் ஜூலை என ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்படுகிறது. இப்போது ஏற்படவுள்ள அதிகரிப்பு ஜூலை 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும். 

மேலும் படிக்க | ஜாக்பாட்! ஊழியர்களுக்கு அசத்தல் பரிசு: ஆகஸ்ட் 25க்குள் சம்பளம், போனஸ்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News